விறுவிறு விக்கிரவாண்டி.. முந்திக் கொண்ட திமுக! அதிமுகவில் அடங்கிய பஞ்சாயத்து.. வேட்பாளர் கன்பாஃர்ம்!
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் முதல் கட்சியாக தனது வேட்பாளரை அறிவித்து அசத்தியிருக்கிறது திமுக. அதே நேரத்தில் அதிமுகவின் வேட்பாளர் தேர்வு இழுபறியாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது போட்டியிடும் வேட்பாளர் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நாளை அவரது பெயர் எடப்பாடி பழனிச்சாமியால் வெளியிடப்படும் என கூறுகின்றனர் அதிமுகவினர்.
கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் விழுப்புரத்தில் மக்களவைத் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அதில் கலந்து கொண்டிருந்த விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் புகழேந்தி மயங்கி விழுந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 6ஆம் தேதி உயிரிழந்தார். இந்த தகவல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டதை அடுத்து ஏப்ரல் 8ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் ஆணையம்: தேர்தல் ஆணைய சட்ட விதிகளின்படி ஒரு எம்எல்ஏ எம்பி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் அதிலிருந்து ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். புகழேந்தி உயிரிழப்புக்கு முன்னதாகவே மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை ஆகியவை நிறைவடைந்து இருக்கின்றன. இந்த நிலையில் தான் விக்கிரவாண்டி உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாக இருக்கும் 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது.
விக்கிரவாண்டி இடை தேர்தல்: அதன்படி வரும் ஜூலை 10ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது 14ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் ஆரம்பித்து ஜூன் 21ஆம் தேதி நிறைவடைகிறது. 24ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையும் 26ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் 13-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
கட்சிகள் பரபரப்பு: தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில் தற்போது திமுக வேட்பாளராக அன்னியூர் சிவாவை அறிவித்துள்ளது. இதேபோல் அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகள் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் தற்போது வரை வேட்பாளர் யார்? என கட்சித் தலைமையால் அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் காணை மேற்கு ஒன்றிய செயலாளரும் விக்கிரவாண்டியின் முன்னாள் எம்எல்ஏவும் ஆன முத்தமிழ்செல்வன், விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் எசாலம்
பன்னீர்செல்வம் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
சிவி சண்முகம்: இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் இந்த தேர்தலில் களமிறங்குவதாக கூறப்பட்டது. சட்டசபைக்கு செல்ல முடியாத நிலையில் மாநில அரசியலில் கவனம் செலுத்த முடியாத நிலையில், மீண்டும் தனது ஆதிக்கத்தை விழுப்புரம் மாவட்டத்தில் செலுத்தும் வகையில் அவர் போட்டியிட தலைமையிடம் வாய்ப்பு கேட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அந்த தகவல் உண்மை இல்லை என்கின்றனர் அதிமுகவினர்.
முத்தமிழ்ச் செல்வன்: இடைத்தேர்தலைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியின் தலையீடும், அதிகாரமும் அதிகமாக இருக்கும் என்பதால் சிவி சண்முகம் களமிறங்க திட்டமிடவில்லை என்கின்றனர். அதே நேரத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவான முத்தமிழ்செல்வனே வேட்பாளராக களம் இறக்கப்பட இருப்பதாக கூறுகின்றனர். ஏற்கனவே எம்எல்ஏ ஆகவும், கடந்த தேர்தலில் தோல்வியடைந்தவருமான முத்தமிழ்செல்வன் மீண்டும் அதிமுக சார்பில் நிச்சயம் களம் இறக்கப்படுவார் என்கின்றனர் விழுப்புரம் அதிமுகவினர். இதற்கான அறிவிப்பை எடப்பாடி பழனிச்சாமி விரைவில் வெளியிடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
குறிவைத்து அடித்த எடப்பாடி பழனிசாமி.. வீழ்த்தப்பட்ட ஜெயக்குமார்.. அதிமுக 2021 தேர்தல் பிளாஷ்பேக் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்?












Click it and Unblock the Notifications