விழுப்புரம் அரசு பஸ்ஸில் 19 சவரன் தங்க நகைகள்.. ரூ.15 லட்சம் நகையை பைக்குள் போட்டதுமே என்னானது?
விழுப்புரம்: நகை திருட்டு என்பது சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது.. ஏற்கனவே தங்கம் விற்கும் விலையில், நகை வாங்குவதை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலைமைக்கு ஏழை, எளிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.. இந்த நேரத்தில் நகைகளை திருடுவதும், கொள்ளையடிப்பதும் என திருட்டு சம்பவங்கள் பெருகி விடுவது கவலையை தந்து வருகிறது.. அதிலும் பொதுமக்கள் பயணம் செய்யக்கூடிய ரயில்கள், பேருந்துகளில் இப்படியான திருட்டுகள் அதிகரித்து வருகின்றன.. இதோ விழுப்புரத்தில் மீண்டும் நடந்துள்ள இந்த சம்பவத்தை பாருங்கள்.
சென்னை தாம்பரம் அருகே உள்ளது பசுவஞ்சேரி.. இங்கு வசித்து வரும் தம்பதியினர் சிங்காரவேலன் - சுபாஷினி.. இதில், சுபாஷினிக்கு 45 வயதாகிறது..

விழுப்புரம் அருகே கோனூரில் நடந்த உறவினரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சுபாஷினி, தன்னுடைய மகன் அனிஷ், மகள் நவ்யா ஆகியோருடன் கிளம் உள்ளார்.. திருமண நிகழ்வு என்பதால், வீட்டில் இருந்து 19 பவுன் நகைகளை ஒரு பையில் எடுத்து வைத்து புறப்பட்டார்..
கல்யாணத்துக்கு பையில் போட்ட தங்கம்
தாம்பரத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு சென்று, அங்கிருந்து அரசு விரைவு பஸ்சில் விழுப்புரம் பஸ்ஸில் தன்னுடைய பிள்ளைகளுடன் ஏறி உட்கார்ந்து கொண்டார் சுபாஷினி.. விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு மாம்பழப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் பஸ்சில் இருந்து சுபாஷினியும் 2 பிள்ளைகளும் கீழே இறங்கி கொண்டனர்.
அப்போது தான் வைத்திருந்த நகை பையை சுபாஷினி சரிபார்த்தபோது, அதிலிருந்த நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பஸ் பயணத்தின்போது யாரோ மர்மநபர்கள், சுபாஷினி வைத்திருந்த பையில் இருந்த நகைகளை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.. அந்த நகைகளின் மதிப்பு ரூ.15 லட்சமாகும்..
19 பவுன் நகைகள்
உடனே இதுகுறித்து சுபாஷினி விழுப்புரம் மேற்கு போலீசாரிடம் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்..
இதே விழுப்புரம் அரசு பஸ்ஸில் இதே போன்ற சம்பவம் 4 நாட்களுக்கு முன்பும் நடந்தது.. விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த பாலன் என்பவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக தன்னுடைய பெற்றோருடன் வந்துள்ளார்..
5 லட்ச ரூபாய் தங்க சங்கிலி
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் இருந்து அரசு பஸ்சில் ஏறி முண்டியம்பாக்கம் பஸ் ஸ்டாப்புக்கு வந்திருக்கிறார்.. அப்போது பாலனின் அம்மாவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.. உடனே அக்கம் பக்கத்திலும், கீழே எங்காவது விழுந்து கிடக்கிறதா என்றும் தேடினார்கள்.. அப்போதும் நகை கிடைக்கவில்லை. இதனால் விக்கிரவாண்டி போலீசில் புகார் தந்த நிலையில், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, அந்த தங்க சங்கிலியை தேடி கொண்டிருக்கிறார்கள்.
அரசு பஸ்களில் அடுத்தடுத்து நடந்துள்ள இந்த திருட்டு சம்பவங்கள் பயணிகள் மத்தியில் கலக்கத்தையும், பீதியையும் உண்டு பண்ணி வருகிறது..
பேருந்துகளில் ஏறினாலே எந்நேரமும் பயணிகள் விழிப்புடனேயே இருக்க வேண்டியிருக்கிறது.. யார் நம்மை நோட்டமிடுகிறார்கள் என்றுகூட தெரியாததால், நகை, பணத்தை இப்படி இழக்க நேரிடுகிறது.












Click it and Unblock the Notifications