சீமானுக்கு ஷாக்! இன்னொரு மாவட்ட செயலாளரும் விலகல்! ஒட்டுமொத்த விழுப்புரம் நாம் தமிழர் கட்சியே காலி!
விழுப்புரம்: நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் மணிகண்டன் விலகுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 2 மாவட்டச் செயலாளர்கள் நாதகவில் இருந்து விலகிய நிலையில் தற்போது மேலும் ஒருவர் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் தலைமையில் அறிவித்தனர். அதைத்தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட நாதக செயலாளர் சுகுமார், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். அவர்கள், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன. அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமான மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியில் பெரும்பான்மையாக இளைஞர்கள் இருந்து வரும் நிலையில், புதிதாக வந்திருக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளது நாம் தமிழர் கட்சிக்கு பெரிய அடியாகப் பார்க்கப்படுகிறது. ஆக, விஜய் கட்சி வருகையால், நாதக-வின் வாக்குகள் சிதறப்போகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications