விழுப்புரம் கோர்ட்டில் ஒரே பரபரப்பு.. பெண்ணை சீண்டிய ராஜேஷ்தாஸ்.. மாஜி டிஜிபி கேஸில் இன்று தீர்ப்பு
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

பின்னர் இது தொடர்பாக இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது... இதில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்-க்கு 3 வருட ஜெயில் தண்டனை விதித்து, விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்திருந்தது.
பெண் அதிகாரி: அத்துடன், புகார் அளிக்க சென்ற அந்த பெண் அதிகாரியின் காரை மறித்ததாக, முன்னாள் எஸ்.பி., கண்ணனுக்கும் ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த தீர்ப்பினை எதிர்த்து ராஜேஷ்தாஸ், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.. இந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஜனவரி 6ம் தேதி அறிவிக்கப்படும் என்று விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்னமேயே அறிவித்திருந்தது.
மேலும், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணையை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மேல்முறையீடு: அந்த மனுவில், "இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாதிடுவதை தான் தவிர்ப்பது போன்ற எதிர்மறையான எண்ணம், முதன்மை அமர்வு நீதிபதி மனதில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
தனது தரப்பு வாதங்களை முன் வைக்க அவகாசம் கேட்ட நிலையில் அமர்வு நீதிபதி, தீர்ப்பை தள்ளிவைத்துள்ளதாகவும், அதனால் வழக்கை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்தால் தனக்கு நியாயம் கிடைக்காது என்பதால், விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். உயர்நீதிமன்றம் உத்தரவிடும் வரை அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இன்று தீர்ப்பு: ஆனால், இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்தார்.. ராஜேஷ் தாசின் கோரிக்கையில் எந்த முகாந்திரமும் இல்லை.. அதனால், விழுப்புரம் நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளிக்க எந்த தடையும் இல்லை என்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
ஆக, 24ம் தேதிக்குள் விசாரித்து தீர்ப்பு கூற வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டிருப்பதால், ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications