முதல்வர் ஸ்டாலினை அவதூறாக பேசிய 4ஆவது வழக்கு.. விழுப்புரம் கோர்ட்டில் சி.வி.சண்முகம் ஆஜர்
விழுப்புரம்: முதல்வர் ஸ்டாலினை அவதூறாக பேசிய 4ஆவது வழக்கில் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆஜராகியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நாட்டார்மங்கலத்தில் கடந்த ஆண்டு மார்ச் 7ஆம் தேதியும் வானூர் வட்டம், ஆரோவில் பேருந்து நிறுத்தம் அருகே மார்ச் 10ஆம் தேதியும், கோட்டக்குப்பம் நகராட்சித் திடலில் மே 1 ஆம் தேதியும் அதிமுக சார்பில் தனித்தனியே பொதுக் கூட்டங்கள் நடந்தன.

இதில் முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை எம்பியுமான சி.வி.சண்முகம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் டி.எஸ்.சுப்பிரமணியன் தனித்தனியே வழக்கு தொடுத்தார். இந்த வழக்குகள் மீதான விசாரணை கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி நடந்தது. இதில் உடல்நலக் குறைவு காரணமாக சி.வி.சண்முகம் ஆஜராகவில்லை.
அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதிகா செந்தில் உள்ளிட்டோர் சி.வி.சண்முகம் வழக்கில் ஆஜராகாதது குறித்த மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.பூர்ணிமா வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜன.4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. முதல்வரை அவதூறு பேசியதாக 4ஆவது வழக்கில் சி.வி.சண்முகம் ஆஜரானார்.












Click it and Unblock the Notifications