விழுப்புரம் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024: இரண்டாவது முறையாக வெற்றியை தட்டி தூக்கிய ரவிக்குமார்
விழுப்புரம்: விழுப்புரத்தில் காலையிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரான ரவிக்குமார் முன்னிலை வகித்து வந்த நிலையில் இறுதியில் 4, 77033 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருக்கிறார்.
விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளரான ரவிக்குமார் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரான பாக்கியராஜை விட 70, 703 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்திருக்கிறார்.
அதன்படி விழுப்புரம் தொகுதியில் வாக்காளர்கள் பெற்ற வாக்குகளின் விவரங்களில் படி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் 4,77,033 வாக்குகளும், பாக்யராஜ் (அதிமுக) 406330 வாக்குகளும், பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்காளர் முரளி சங்கர் 181882 வாக்குகளும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திரைப்பட இயக்குனர் களஞ்சியம் 57242 வாக்குகளும் பெற்றிருக்கின்றனர்.

திமுக கூட்டணியில் ரவிக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக விழுப்புரம் தொகுதியில் களமிறங்கி உள்ளார். இந்த முறை அவர் உதயசூரியனுக்கு பதில் பானை சின்னத்தில் களமிறங்கி உள்ளார்.
இவரை எதிர்த்து அதிமுகவில் பாக்யராஜ், பாஜக கூட்டணியில் பாமகவின் முரளி சங்கர், சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் திரைப்பட இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். இந்த தொகுதியில் 2வது முறையாக வெல்லும் முனைப்பில் சிட்டிங் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் உள்ளார்.
விழுப்புரம்(தனி) லோக்சபா தொகுதியில் மொத்தம் விழுப்புரம். வானூர் (தனி), திண்டிவனம் (தனி), திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, விக்கரவாண்டி உள்ளிட்ட 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் திண்டிவனம், வானூரில் மட்டும் அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளனர். மற்ற 4 தொகுதிகளிலும் திமுக எம்எல்ஏக்கள் உள்ளன. குறிப்பாக திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக அமைச்சர் பொன்முடி உள்ளார். இது ரவிக்குமாருக்கு பிளஸ் பாயிண்டாக உள்ளது.
அதேவேளையில் அதிமுகவை குறைத்து மதிப்பிட முடியாது. ஏனென்றால் திண்டிவனம் தொகுதியில் இருந்து 2009ல் விழுப்புரம் (தனி) தொகுதி உருவானது. அதன்பிறகு முதல் 2 தேர்தலில் அதாவது 2009, 2014 ஆகிய லோக்சபா தேர்தல்களின்போது அதிமுக வேட்பாளர்கள் தான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றனர். கடந்த 2019ல் தான் திமுக கூட்டணி வேட்பாளர் ரவிக்குமார் வென்றார். இதனால் விழுப்புரம் (தனி) தொகுதியில் அதிமுக இழந்த செல்வாக்கை மீட்க பணி செய்துள்ளது.
ஆனாலும் தமிழகத்தில் ஆளும் கட்சியாக திமுக இருப்பது, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கான தனிப்பட்ட செல்வாக்கு உள்ளிட்டவை ரவிக்குமாருக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. ஆனால் பானை சின்னத்தில் போட்டியிடுவது சிக்கலாக மாறலாம் என கூறப்படுகிறது.
2009-ம் ஆண்டு முதல் விழுப்புரம் (தனி) தொகுதியாக மாற்றப்பட்டது. 2009-ம் ஆண்டு முதல் 2 முறை அதிமுக வென்றது; ஒரு முறை திமுக கூட்டணி வேட்பாளர், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விசிக ரவிக்குமார் வென்றார். முன்னர் திண்டிவனம் தொகுதியாக இருந்த போது காங்கிரஸ் 7 முறை வென்ற தொகுதி இது. மதிமுக 2 முறை, திமுக 2 முறை வெற்றி பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விழுப்புரம் (தனி) தொகுதியின் 2009, 2014, 2019 தேர்தல் முடிவுகளின் விபரம் வருமாறு:
2009 லோக்சபா தேர்தல் முடிவுகள்
மு. ஆனந்தன்(அதிமுக) 3,06,826 (வெற்றி)
சுவாமிதுரை (விடுதலை சிறுத்தைகள் கட்சி) 3,04,029
கணபதி(தேமுதிக) 1,27,476
2014 லோக்சபா தேர்தல் முடிவுகள்
எஸ். ராஜேந்திரன்(அதிமுக) 4,82,704 (வெற்றி)
முத்தையன் (திமுக) - 2,89,337
உமா சங்கர்(தேமுதிக) - 2,09,663
ராணி (காங்கிரஸ்) 21,461
2019 லோக்சபா தேர்தல் முடிவுகள்
ரவிக்குமார் (விசிக வேட்பாளர் உதயசூரியனில் போட்டி) - 5,59,585 (வெற்றி)
வடிவேல் இராவணன்(பாமக) - 4,31,517
கணபதி(அமமுக) - 58,019
பிரகலதா(நாம் தமிழர் கட்சி) - 24,609
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications