மாமியாரை பெட்ரோலில் எரித்த மருமகள்.. ஃபிரைடு ரைஸ் சாப்பாடு வே.. இளம்பெண்ணால் விக்கித்த விழுப்புரம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் மாமியாரை தீ வைத்து எரித்து கொன்ற மருமகள் கைதாகியிருக்கிறார்.. இந்த கொலைக்கான காரணத்தை போலீசாரிடம் வாக்குமூலமாகவும் மருமகள் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தை அடுத்திருக்கும் என்.ஆர்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் பாண்டியன் - ராணி.. இவர்களது மகன் கருணாமூர்த்தி... கடலூர் அரசுக் கல்லூரியில் படித்த கருணாமூர்த்தி, கல்லூரியில் படித்த பாலூர் கிராமத்தைச் சேர்ந்த சுவேதா என்ற பெண்ணை காதலித்தார்.

திருமணம் : சுவேதாவும் கருணாமூர்த்தியை விரும்பினார்.. இறுதியில், இருவரும், இரு வீட்டு சம்மதத்துடன் கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதி, திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு கருணாமூர்த்தி செங்கல்பட்டில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
ஆனால், அவரின் அப்பா பாண்டியன் சென்னையில் தங்கி வேலை செய்து வந்ததால், என்.ஆர்.பாளையம் வீட்டிலேயே சுவேதாவும், மாமியார் ராணியும் மட்டுமே இருந்தனர். இந்நிலையில் தீபாவளிக்கு முதல் நாள் அதாவது, கடந்த அக்டோபர் 30-ம் தேதி இரவு, வீட்டின் ஹாலில் மாமியார் ராணியும், பெட்ரூமில் சுவேதாவும் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
அலறிய மருமகள்: அப்போது திடீரென்று உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், அலறி துடித்திருக்கிறார் ராணி... அவரது அலறல் சத்தம் கேட்டு பெட்ரூமை விட்டு வெளியே வந்த மருமகள் சுவேதா, "காப்பாத்துங்க... காப்பாத்துங்க" என்று கதறியிருக்கிறார்..
இவர்கள் இருவரின் அலறலையும் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த ராணியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. உடனடியாக ராணி மீதிருந்த தீயை அணைத்து, படுகாயங்களுடன் இருந்த அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
போஸ்ட் மார்ட்டம்: ஆனால் ராணிக்கு 80 சதவிகிதத்திற்கு மேல் தீக்காயங்கள் ஏற்பட்டுவிட்டதால், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி மறுநாள் 31-ம் தேதி உயிரிழந்தார் ராணி... இதையடுத்து, ராணியின் சடலம் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது. அப்போதுதான், ராணியின் உடல் பெட்ரோல் ஊற்றி எரிந்தது தெரியவந்தது.
இதனால், தன்னுடைய அம்மாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ராணியின் இளைய மகனும், கருணாமூர்த்தியின் தம்பியுமான தட்சிணாமூர்த்தி, கண்டமங்கலம் போலீசில் புகார் தந்தார்.. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சம்பவத்தன்று வீட்டிலிருந்த மருமகள் ஸ்வேதாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் ஸ்வேதாவின் குட்டு வெளிப்பட்டது..
மாமியார் ராணி: தன்னுடைய கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமியார் ராணியை, பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, ஸ்வேதாவையும், எதிர்வீட்டில் வசித்து வந்த அவரது காதலன் சதீஷ் என்பவரையும், கண்டமங்கலம் போலீஸார் கைது செய்தனர். போலீஸாரிடம் ஸ்வேதா தந்துள்ள வாக்குமூலம் இதுதான்:
"நான் பி.எஸ்சி., பி.எட்., முடித்துள்ளேன். கல்லூரியில் படிக்கும்போதே சில ஆண் நண்பர்களுடன் தவறான பழக்கம் இருந்தது. திருமணத்திற்கு பிறகு, கணவர் வெளியூரில் தங்கி வேலை செய்து வந்தார்.
மாமியார் ராணியும் வேலைக்கு சென்றுவிடுவார் என்பதால், நான் மட்டுமே வீட்டில் தனியாக இருப்பேன். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எதிர் வீட்டில் வசிக்கும் டிரைவர் சதீஷ் குமாருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. மாமியார் ராணி கூலி வேலைக்கு சென்று மாலை வீடு திரும்புவார். சில நேரங்களில் இரவு வெளியூரில் தங்கி வேலை செய்வார்.
பாண்டிச்சேரி: இந்த சமயத்தில் நானும் சதீஷ்குமாரும் உல்லாசமாக இருந்து வந்தோம். சதீஷ்குமார் என்னை அடிக்கடி அவரது பைக்கில் பாண்டிச்சேரிக்கு அழைத்துச் செல்வார். சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் நாங்கள் உல்லாசமாக இருந்ததை மாமியார் ராணி நேரில் பார்த்து விட்டார். என்னிடம் கடுமையாக பேசி, தீபாவளிக்கு ஊருக்கு வரும் எனது கணவரிடம் தெரிவிப்பதாக கூறினார். அதை நான், சதீஷ்குமாரிடம் கூறினேன். அவர் பெட்ரோல்ஊற்றி தீ வைத்து எரித்து விடுவோம் என்றார்.
பெட்ரோல் வாங்க கடந்த 30- ம் தேதி 500 ரூபாய் கொடுத்தார். அந்த பணத்தின் மூலம் 2 லிட்டர் பெட்ரோல் வாங்கி வீட்டில் மறைத்து வைத்தேன். அன்று மாலை மாமியார் ராணியிடம் நைசாக பேசினேன்.
ஃபிரைடு ரைஸ்: "தெரியாமல் செய்துட்டேன். என்னை மன்னிச்சுடுங்க.. உங்கள் மகனிடம் இதையெல்லாம் சொல்லி, எங்கள் வாழ்க்கையை வீணாக்கிடாதீங்க. தீபாவளிக்கு துணி எடுத்து வரலாம் வாங்க" என்று கூறி மாமியாரை, பாக்கம் கூட்டு ரோடுக்கு அழைத்துச் சென்றேன். அங்கு துணி எடுத்து கொண்டு, ஹோட்டலில் ஃபிரைடு ரைஸ் வாங்கிக் கொண்டு இரவு 8 மணிக்கு வீட்டுக்கு வந்தோம்.
அதையடுத்து ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த தூக்க மாத்திரையை பவுடராக்கி ஃபிரைடு ரைஸில் கலந்து, மாமியாருக்கு கொடுத்தேன். அதை சாப்பிட்டு சிறிது நேரத்திலேயே அவர் தூங்கி விட்டார். இரவு 10 மணிக்கு சதீஷ் குமார் வீட்டிற்கு வந்தார். 2 லிட்டர் பெட்ரோலை ஒரு பிளாஸ்டிக் கப்பில் ஊற்றி மாமியார் ராணியின் உடல் முழுவதும் ஊற்றினார்.. நான் தீ வைத்தேன்.
வாக்குமூலம்: பிறகு உடனடியாக சதீஷ்குமாரை அங்கிருந்து அனுப்பிவிட்டேன். ஊர் மக்கள் திரண்டு வந்து மாமியாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, சதீஷ்குமாரும் உதவி செய்வதுபோல் உடன் சென்றார். நடந்த சம்பவம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது எனக்கூறி நாடகமாடினேன்" என்று ஸ்வேதா வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
திருமணமான மூன்றே மாதத்தில், மாமியாரை மருமகளே உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம், விழுப்புரத்தில் கடலூரில் மிகப்பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications