விழுப்புரத்தில் வீடு புகுந்து டவுசர் கொள்ளையர்கள் கொடூரம்! கத்திமுனையில் பெண்ணிடம் 16 பவுன் நகை கொள்ளை

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணை மிரட்டி 16 சவரன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கத்தை டவுசர் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கில் டவுசர் கொள்ளையர்கள் மீதும் போலீசார் சந்தேகப்படும் நிலையில் இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள லிங்கம் நகரில் ஜானி என்பவர் வசித்து வருகிறார். மருந்து வியாபாரியான இவரது வீட்டிற்குள் இன்று அதிகாலை அத்துமீறி டவுசர் கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்த நிலையில், சத்தம் கேட்டு ஜானி என்பவரும் அவரது மனைவியும் வெளியே வந்துள்ளனர். அப்போது முமமூடி அணிந்தபடி டவுசர் கொள்ளையர்கள் நான்கு பேர் வீட்டிற்குள் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

Villupuram Theft Incident 16 sovereigns of gold jewellery snatching by trouser Gangs

கண்ணிமைக்கும் நேரத்தில் ஜானியின் மனைவி கழுத்தில் கத்தியை வைத்த கொள்ளையர்கள், தாலி செயின் மற்றும் பீரோவில் இருந்த 16 சவரன் தங்க நகை, 1.16 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர். ஜானி வீட்டிற்கு முன்பாக இருந்த இரண்டு வீடுகளின் கதவுகளையும் உடைத்துக்கொண்டு டவுசர் கொள்ளையர்கள் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டிற்குள் எதுவும் கிடைக்காததால், ஜானி வீட்டிற்குள் நுழைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார், தடயவிய நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். விழுப்புரம் அருகே உள்ள செஞ்சி ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி மாயமாகி இன்றுடன் 32 நாட்கள் ஆகியுள்ளன.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். சிறுமி மாயமான விவகாரத்தில் இதுவரை துப்பு துலங்காததால், டவுசர் கொள்ளையர்களுக்கு அந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று என்ற சந்தேகத்தை பலரும் கிளப்பினர். இந்த நிலையில்தான் விழுப்புரம் அருகே கொள்ளை சம்பவத்தில் டவுசர் கொள்ளையர்கள் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும் போலீசாருக்கு பொதுமக்கள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில், வீடுபுகுந்து கொள்ளையர்கள் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+