3 தோழிகளின் டார்ச்சர் ஒரு பக்கம்.. ஆபாச பட மார்பிங் மறுபக்கம்.. கண்ணீர் கடலில் "கன்னி"!

தோழிகளால் கடல்கன்னி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: தன்னுடைய ஆபாச போட்டோவை பார்த்ததும் கடல்கன்னி அதிர்ந்து விட்டாராம்.. அதற்குள் அவருடைய ஃபாலோயர்ஸ்கள், "நீங்களா இது? ஏன் எப்படி போட்டோவை போட்டிருக்கீங்க" என்று கடிந்து கொண்டுள்ளனர்.. 3 தோழிகளின் டார்ச்சர் தாங்காமல் தற்கொலை வரை சென்றதாக கடல்கன்னி கண்ணீர் விடுகிறார்.

செஞ்சியை அடுத்த சத்யமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கடல்கன்னி.. 39 வயதாகிறது.. கணவரை இழந்தவர் கடல்கன்னி... 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.

கடந்த 2 வருடங்களாக டிக் டாக்கை கலக்கி வருபவர்.. நிறைய டிக் டாக் வீடியோக்களை வெளியிடுவார்.. இவருக்கு 33 ஆயிரம் ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள். இதற்கு காரணம் நல்ல நல்ல கருத்துக்களை இவர் வெளியிட்டு வந்ததுதான்.

vizhupuram tik tok woman attempted suicide case

இந்நிலையில் டிக் டாக் மூலம் விழுப்புரத்தை சேர்ந்த லதா, சென்னையை சேர்ந்த கவிதா, சுமதி என்பவர்கள் கடல்கன்னிக்கு அறிமுகமானார்கள்.. நட்பாக பேசினார்கள்.. நெருக்கம் ஆனார்கள். அவர்கள் ஆபாசமாக டிக்டாக் செய்பவர்களாம்.. அதனால் அவர்களுக்கு கடல்கன்னி பலமுறை அட்வைஸ் தந்துள்ளதாக தெரிகிறது.. எனினும் அவர்கள் அந்த அட்வைஸை கேட்கவில்லை.

குடும்ப கஷ்டத்தை அவர்களிடம் கடல் கன்னி சொல்லி சொல்லி அடிக்கடி அழுவாராம்... அவர்களும் ஆறுதல் சொல்வார்களாம்! ஒருநாள் திடீரென, தங்களுக்கு தெரிந்தவரிடம் நெருங்கி பழகினால் 2 லட்சம் ரூபாய் தருவார் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.. மேலும் விபச்சாரத்திலும் ஈடுபட கட்டாயப்படுத்தியும் உள்ளனர். ஆனால் உடனடி மறுப்பு சொல்லி உள்ளார் கடல் கன்னி.

"அப்படி வரும் பணம் எனக்கு தேவையே இல்லை" என்று கடல்கன்னி அவர்களிடம் சொல்லி உள்ளார். இதைக்கேட்டு 3 பேருமே ஷாக் ஆனார்களாம்.. உடனே சுதாரித்து இதை பற்றி யாரிடமும் வெளியே சொல்ல கூடாது, குறிப்பாக டிக்டாக்கில் பதிவிட கூடாது, என்று மிரட்டி ரூ. 2 லட்சம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனராம். தன்னால் பணம் தர முடியாது என்று சொல்லவும், கடல்கன்னியின் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து டிக்டாக்கில் பதிவிட்டுள்ளனர்.

திடீரென டிக்டாக்கில் தன் ஆபாச போட்டோவை பார்த்ததும் கடல்கன்னி அதிர்ந்து விட்டார்.. அதற்குள் அவருடைய ஃபாலோயர்ஸ்கள், "நீங்களா இது? ஏன் இப்படி போட்டோவை போட்டிருக்கீங்க" என்று கடிந்து கொண்டுள்ளனர்.. இதனால் மேலும் மனவேதனையான கடல் கன்னி விழுப்புரம் எஸ்பி ஆபீசுக்கு நேரிலேயே சென்று புகார் தந்துள்ளார்... ஆனால் அந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்காமல், இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.. 3 தோழிகளின் இந்த டார்ச்சர் தாங்காமல் தற்கொலை வரை சென்றதாக கடல்கன்னி கண்ணீர் விடுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+