விழுப்புரத்தில் தோண்டப்பட்ட கண்.. ஒரே நேரத்தில் இருவரிடம் நெருங்கி பழகிய பெண்.. இப்போ மோசமான நிலைமை
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது.. ஒரு கண்ணை தோண்டி எடுத்து கொலை செய்ய துணியும் அளவுக்கு கள்ளக்காதல் கொடுமை நடந்துள்ளது. இது தொடர்பாக குற்றவாளி தற்போது தலைமறைவாகி விட்டார்.. எனவே அவரை விழுப்புரம் போலீசார் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது விழுப்புரம் மாவட்டத்தில்?
விழுப்புரம் அருகே மரகதபுரத்தை சேர்ந்தவர் சங்கர்.. 45 வயதான இவர், கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியாக உள்ளார்..

இவர் தினந்தோறும் வேலைக்கு செல்லும்போது அன்பு (எ) சரத்குமார் அறிமுகமாகியிருக்கிறார்.. 39 வயதான சரத்குமார் இருவேல்பட்டை சேர்ந்தவர்.. இவர்கள் தினந்தோறும் ஒரே ரூட்டில் சென்றுவந்ததால், ஒருகட்டத்தில் நெருங்கிய நண்பர்களானார்.
குத்துயிர் குலையுயிர்
இந்நிலையில் நேற்றுமுன் தினம் இரவு, சங்கர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. மரகதபுரம் வாய்க்கால் மேடு பகுதியில் குத்துயிரும் குலையுயிருமாக சங்கர் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள், உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர்.. போலீசாரும் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்தனர்.
உயிருக்கு போராடி கொண்டிருந்த சங்கரை மீட்டனர்.. அப்போதுதான், அவரது தலை, முகம், உடம்பெல்லாம் ரத்த காயங்கள் இருந்ததை கண்டனர்..
வலது கண் என்னாச்சு
மேலும், மர்ம உறுப்பு சிதைக்கப்பட்டு, அவரது வலது கண் தோண்டி எடுக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. இதையடுத்து, சங்கரை மீட்ட போலீசார், அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பிறகு இது தொடர்பான விசாரணையையும் கையிலெடுத்தனர்.. அப்போதுதான் சங்கரை பற்றின பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
அதாவது, சங்கருக்கு ஏற்கனவே அஞ்சுலட்சம் என்பவருடன் திருமணமாகிவிட்டது. ஆனாலும் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மனைவியை பிரிந்து வசித்து வந்துள்ளார்.. அப்போதுதான் மரகதபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் சங்கருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது.
ஒரே நேரத்தில் இருவருடன் கள்ளக்காதல்
ஆனால், அந்த பெண்ணோ, திடீரென சங்கரின் நெருங்கிய நண்பரான அன்பு மீதும் ஆசை கொண்டுள்ளார்.. நாளடைவில் அன்புவுக்கும், அந்த பெண்ணுக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.. அன்பு வந்தபிறகு, சங்கரை அந்த பெண் திரும்பிகூட பார்ப்பதில்லையாம்.. சரியாக பேசுவதில்லையாம்..
இதனால் மனவேதனையடைந்த சங்கர், கள்ளக்காதலியிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.. ஏன் என்னிடம் முன்புபோல் பேசுவதில்லை? என்று கேட்டு வந்துள்ளார்..
இது அந்த பெண்ணுக்கு எரிச்சலை தந்திருக்கிறது.. நாளுக்கு நாள் சங்கரின் டார்ச்சர் அதிகமாகிவிட்டதாக, அன்புவிடம் அந்த பெண் முறையிட்டுள்ளார்..
இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வந்த சங்கரிடம், அன்பு கேள்வி எழுப்பியிருக்கிறார்.. அப்போது இரு நண்பர்களுக்குள்ளும் தகராறு வெடித்துள்ளது.. அப்போது ஏற்பட்ட தகராறில், சங்கரை கண்மூடித்தனமாக வெட்டி விட்டாராம் அன்பு.
இவ்வளவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
2 கள்ளக்காதலன்
இதுகுறித்து சங்கரின் மனைவி அஞ்சுலட்சம், விழுப்புரம் தாலுகா போலீஸில் புகார் தந்துள்ளார்.. இந்த புகாரின் பேரில் அன்பு (எ) சரத்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.. மற்றொருபுறம், இந்த கொடூர தாக்குதலில் கள்ளக்காதலியும் சம்பந்தப்பட்டுள்ளதால், அவரிடம் போலீசார் விசாரணை நடக்கிறது.
இதனிடையே சங்கர் மருத்துவமனையில் சீரியஸாக இருக்கிறாராம்.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சங்கர் சிகிச்சையில் உள்ளதாக தகவல வெளியாகி உள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications