சிரிச்சிட்டே "ஸ்பெஷல் டீ" போட்டு தந்த காதலி.. இப்ப காதலனுக்கு ஒரு கிட்னி காலி.. விழித்த விழிப்புரம்
விழுப்புரம்: விழுப்புரம் மாணவியை போலீசார் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.. கேரளாவில் ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொன்ற கல்லூரி மாணவி, தூக்கு தண்டனை பெற்று ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். இப்போது நம்முடைய விழுப்புரத்திலும் இதே பாணி கொலை முயற்சி நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ளது கிரிமேடு கிராமம்.. இங்கு வசித்து வருபவர் 24 வயது மகன் ஜெயசூர்யா. ஆந்திராவில் சட்டக் கல்லூரியில் 2ம் வருடம் படித்து வருகிறார். வீட்டில் இருந்தபடியே பிரவுசிங் சென்டரும் நடத்தி வருகிறார்.

இவர் தன்னுடைய பக்கத்து வீட்டில் வசித்து வரும் ரம்யா என்ற கல்லூரி மாணவியை காதலித்து வருகிறார்.. ரம்யாவும் ஜெயசூர்யாவை அளவுக்கு அதிகமாக விரும்பியிருக்கிறார்.
இந்நிலையில், இவர்களது காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ந்த குடும்பத்தினர், நீங்கள் இருவரும் உறவு முறையில் அண்ணன் தங்கை" என்று சொல்லி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெயசூர்யா, தங்கையை எப்படி காதலிப்பது? என்ற உறுத்தல் ஏற்பட்டுள்ளது. பிறகு, ரம்யாவுடனான காதலையும் கைவிட்டு, அவருடன் பேசுவதையும் நிறுத்தி விட்டார்.
பிளேடால் அறுத்து போட்டோ
ஆனால் ரம்யாவுக்கோ காதலை கைவிட மனசு வரவில்லை.. இதனால், தன்னை காதலிக்குமாறு ஜெயசூர்யாவை கட்டாயப்படுத்தி உள்ளார்.. பிறகு தன்னுடைய கைகளை பிளேடால் அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்டும் போட்டோக்களை, எடுத்து ஜெயசூர்யாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். பழையபடி காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டியிருக்கிறார்.
ஆனாலும் ஜெயசூர்யா மனம் மாறவில்லை.. தங்கை உறவு முறையை காதலிக்க முடியாது என்று பிடிவாதம் காட்டியிருக்கிறார்.. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 2ம் தேதி மாலை ஜெயசூர்யாவின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த ரம்யா, கேஷூவலாக பேசியிருக்கிறார்.. டீ போட்டு தரட்டுமா?" என்று அன்பாக கேட்டு, கிச்சனுக்கு சென்று டீ போட்டுள்ளார்.
அப்பாவி ஜெயசூர்யா
அதில் கையோடு கொண்டு வந்திருந்த எலிபேஸ்ட்டையுடம் கலந்து, அதை ஜெயசூர்யாவுக்கு சிரித்துகொண்டே வந்து தந்தார். இதை அறியாத ஜெயசூர்யாவும் டீயை குடித்துவிட்டார்.. பிறகு இரவு 9.30 மணிக்கு வாட்ஸப் மெசேஜ்ஜில், உடம்பில் ஏதேனும் பிரச்சனை இருக்கா? என்று ஜெயசூர்யாவிடம் ரம்யா கேட்டுள்ளார்.
ஆமாம் என்று அப்பாவியாய் ஜெயசூர்யா பதில் சொன்னதும், "ஒன்னுமில்லை, நான் தான் டீயில் எலிபேஸ்ட்டை கலந்து தந்தேன் என்று சொல்லி சிரித்திருக்கிறார் ரம்யா. இதைக்கேட்டு அதிர்ந்த ஜெயசூர்யா, வாந்தி எடுக்க முயன்றுள்ளார். ஆனாலும் வாந்தி வரவில்லை.. அதற்குள் உடல்நிலையும் மோசமாக தொடங்கியது..
நிலைமை மோசமாகிவிட்டது
இரவு 11 மணிக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படவும், தன்னுடைய நண்பர்களுக்கு உடனடியாக தகவல் தந்தார் ஜெயசூர்யா.. இதையடுத்து, மடப்பட்டு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஜெயசூர்யாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.
ஆனால், ஜெயசூர்யாவின் உடல் மிகவும் மிகவும் மோசமடையவும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இப்போது ஒரு மாத காலமாக ஜெயசூர்யாவுக்கு சிகிச்சை நடக்கிறது. ஆனால், ஒரு கிட்னி செயலிழந்து விட்டதாக டாக்டர்கள் அறிவித்துவிட்டார்கள்.
ரம்யா குடும்பத்தினர் எங்கே?
இதில் என்ன ஒரு வியப்பு என்றால், ஜெயசூர்யா இதுவரை ரம்யாவை காட்டிக் கொடுக்கவில்லை.. தற்கொலை செய்வதற்காக எலி மருந்தை குடித்துவிட்டதாகவே தன்னுடைய குடும்பத்தினரை நம்பவைத்து வந்தார்.. ஆனால், ஜெயசூர்யாவின் தொலைபேசியை பெற்றோர் சோதனை செய்துள்ளனர்.
அப்போதுதான், ரம்யாவின் வாட்ஸ்அப் மெசேஜ் படித்து பார்த்து வெலவெலத்து போனார்கள்.. இதற்கு பிறகே விழுப்புரம் எஸ்பி அலுவலகத்துக்கு புகார் தந்தார்கள்..
இந்த புகாரை திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால், அதற்குள் ரம்யாவையும், அவரது குடும்பத்தினரையும் காணவில்லை.. அவர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர். காதலனுக்கு டீயில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து காதலி தீர்த்துக்கட்ட முயன்ற சம்பவம் விழுப்புரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications