அண்ணன் தங்கச்சினு சொல்லிட்டாங்க.. ஆசையா லவ் பண்ணேன்.. அதான்: காதலனுக்கு எலி மருந்து "டீ" தந்த காதலி
விழுப்புரம்: காதலனுக்கு 'டீ'யில் எலி மருந்து கலந்து கொடுத்த விழுப்புரம் மாணவி அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், அவர் எதற்காக காதலனுக்கு விஷம் கொடுத்தார் என்பது குறித்து போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ள கிரிமேடு கிராமத்தை சேர்ந்த 24 வயது ஜெயசூர்யா, ஆந்திராவில் சட்டக் கல்லூரியில் 2ம் வருடம் படித்து வருகிறார். வீட்டில் இருந்தபடியே பிரவுசிங் சென்டரும் நடத்தி வருகிறார். இவரும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் ரம்யா என்ற கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த காதல் விவகாரம் 2 குடும்பத்துக்கும் தெரிந்து அதிர்ச்சி அடைந்து, "நீங்கள் இருவரும் உறவு முறையில் அண்ணன் தங்கை" என்று சொல்லி உள்ளார். இப்படியொரு உறவு முறையை எதிர்பார்க்காத ஜெயசூர்யா, தங்கையை அண்ணன் காதலிப்பதா? என்ற உறுத்தலுக்கு ஆளானார். இதனால், ரம்யாவுடன் பேசுவதையும் நிறுத்தி விட்டார்.
பிளேடால் அறுத்து தற்கொலை முயற்சி
இதை ஏற்றுக் கொள்ள முடியாத ரம்யா, தன்னை காதலிக்குமாறு ஜெயசூர்யாவை கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.. தன்னுடைய கைகளை பிளேடால் அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்டும் போட்டோக்களை, ஜெயசூர்யாவுக்கு அனுப்பி வைத்தும், ஜெயசூர்யா மனம் மாறவில்லை.. இதற்கு பிறகுதான், ஜெயசூர்யாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார் ரம்யா.
வீட்டில் யாருமில்லாத சமயம் ஜெயசூர்யாவை அழைத்து, "டீ போட்டு தரட்டுமா?" என்று ஜெயசூர்யாவிடம் கேட்டு, கிச்சனுக்கு சென்று டீ போட்டுள்ளார்.. அதில் கையோடு கொண்டு வந்திருந்த காலாவதியான எலி பேஸ்ட்டையும் கலந்து ஜெயசூர்யாவிடம் தந்து குடிக்க செய்தார். தந்தார். இரவு 9.30 மணிக்கு வாட்ஸ்ப் மெசேஜ்ஜில், "உடம்பில் ஏதேனும் பிரச்சனை இருக்கா? என்று ஜெயசூர்யாவிடம் ரம்யா கேட்டுள்ளார்.
எலி பேஸ்ட் டீ குடித்த காதலன்
ஆமாம் என்று ஜெயசூர்யா பதில் சொன்னதற்கு, "நான் தான் டீயில் எலிபேஸ்ட்டை கலந்து தந்தேன்" என்று கேஷூவலாக சொன்னாராம் ரம்யா. இதற்கு பிறகுதான், ஜெயசூர்யா, வாந்தி எடுத்து, உடல்நிலை மோசமாகியிருக்கிறது. மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.. இதையடுத்து, ஜெயசூர்யாவுக்கு ஒரு கிட்னி பாதிப்படைந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலைமையில சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால், இவ்வளவு நடந்தும் காதலியை தன்னுடைய வீட்டில் ஜெயசூர்யா காட்டி தரவில்லை.. பெற்றோரே, மகனின் வாட்ஸ்அப் மெசேஜ்களை படித்து பார்த்து அதிர்ந்துபோய், திருவெண்ணெய்நல்லூர் போலீசுக்கு புகார் தந்தனர்.
ரம்யா அதிரடி கைது
ஆனால், அதற்குள் ரம்யா தலைமறைவாகிவிட்டதால் அவரை போலீசார் தேடி வந்தனர். இதையடுத்து நேற்றிரவு ரம்யா கைது செய்யப்பட்டார். அவரிடம் உடனடியாக விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் பல்வேறு தகவல்களை ரம்யா போலீசாரிடம் சொல்லி உள்ளார்.
"அண்ணன்-தங்கை உறவு முறை வருவதாக சொல்லி எங்களது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 2 வருஷமாக ஆசை, ஆசையாக காதலித்த காதலனை திருமணம் செய்யக்கூடாது, அவரிடம் பேசக்கூடாது என்கிறார்கள்.. என்னால் அவரை மறக்க முடியாது. காதலித்தவரையே திருமணம் செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்தேன்
எலி மருந்து விஷம்
இருவரில் யாராவது விஷம் குடித்தது போன்று நடித்தால், பெற்றோர் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என்று காதலனிடம் ஐடியா சொன்னேன்.. அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.
அதன்படி அவரை வீட்டிற்கு அழைத்து "டீ"யில் எலி மருந்து(விஷம்) கலந்து கொடுத்து விட்டேன். குடித்த சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்த அவரது வாயில் இருந்து நுரை தள்ளியது. உடனே உறவினர்கள் மூலம் ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். மற்றபடி அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் எனக்கு கிடையாது" என்று தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications