செஞ்சி சங்கீதாவை தெரியுமா.. ஏகப்பட்ட ஆண் நண்பர்களாம்.. சின்ன பாப்பா விடலையே.. கடைசியில் நடந்த கொடுமை
விழுப்புரம்: எந்நேரமும் ஆண் நண்பர்களுடன் மருமகள் போனில் பேசி வந்துள்ளார்.. கடைசியில் இது ஒரு கொலை வரை சென்றுவிட்டது.
விழுப்புரம் செஞ்சியை அடுத்துள்ளது கம்பந்தூர் மதுரா பாண்டியன் குளம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் சின்னபாப்பா.. 63 வயதாகிறது.. இவரது கணவர் இறந்துவிட்டார்.. அதனால், தன்னுடைய 3 மகன்களையும் சின்னபாப்பா கஷ்டப்பட்டு வளர்த்துள்ளார்..

3 மகன்களுக்கு திருமணமாகிவிட்டது.. முனியன் மறைவுக்கு பிறகு, 3-வது மகன் பாஸ்கருடன் சின்னப்பாப்பா வசித்து வந்திருக்கிறார்.. பாஸ்கரின் மனைவி பெயர் சங்கீதா.. 30 வயதாகிறது. ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.
பாஸ்கர்: ஆனால், கடந்த 4 வருடத்துக்கு முன்பு, விபத்து ஒன்றில் பாஸ்கருக்கு கால் போய்விட்டது.. அதனால், இடதுகால் வெட்டி எடுத்துவிட்டனர்.. இதனால் அவருக்கு வேலைக்கு போக முடியாத நிலைமை வந்தது.. எனினும், குடும்பத்தை சமாளிக்க வேண்டும் என்பதற்காக, சங்கீதா கூலி வேலைக்கு சென்று, குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார். குடும்ப சூழலால் வேலைக்கு சென்ற இடத்தில், நிறைய ஆண் நண்பர்களுடன் சங்கீதாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
மேலும், வேலை முடித்து வீட்டுக்கு வந்துவிட்டாலும், ஆண் நண்பர்களுடன் செல்போனில் அதிக நேரம் பேசிவந்தாராம்.. நாளுக்கு நாள் மருமகளின் நடத்தையில் மாற்றம் தென்பட்டதையும், வீட்டில் எந்நேரமும் போனில் ஆண் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பதையும் பார்த்த மாமியார், சங்கீதாவை கண்டித்துள்ளார். ஆனாலும் சங்கீதா மாறவில்லை.. தொடர்ந்து ஆண் நண்பர்களுடன் செல்போனிலும், நேரிலும் பேசிக்கொண்டே இருந்தார்.
ஆத்திரம்: இதுதொடர்பாக சம்பவத்தன்றும், மருமகளை கண்டித்துள்ளார் சின்னப்பாப்பா.. அப்போது, 2 பேருக்குமிடையே தகராறு வெடித்துள்ளது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சங்கீதா, மாமியார் சின்ன பாப்பாவை, எட்டி உதைத்துள்ளார்.. இதில் வலி தாங்க முடியாமல் கீழே விழுந்த அழுதார் சின்னப்பாப்பா.. அப்போதும் ஆத்திரம் தாங்காத சங்கீதா, கீழே கிடந்த கட்டையை கொண்டு வந்து, மாமியாரை சரமாரியாக அடித்து தாக்கினார்..
இதில், சின்னபாப்பா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த செஞ்சி போலீஸார், விரைந்து வந்து, சின்னபாப்பாவின் சடலத்தை பார்வையிட்டனர்..
ஆண் நண்பர்கள்: அக்கம்பக்கத்தினரிடமும் விசாரித்தனர்.. இறுதியில், சின்னப்பாப்பாவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இப்போது சங்கீதா ஜெயிலில் உள்ளார். அவர் யார் யாரிடம் பேசினார்? ஆண் நண்பர்கள் யார் என்பது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது. மாமியாரை கட்டையாலேயே அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications