தங்கத்தில் தாலியுடன் ஸ்கூட்டரில் வந்த நர்ஸ் நித்யா.. விழுப்புரம் மேம்பாலத்தில் நம்ப முடியாத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: தங்க நகைகளின் விலையானது ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது, இன்று அக்டோபர் 25ம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு அதிரடியாக ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,500க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மக்களால் தங்கத்தை நினைத்து கூட பார்க்க முடியாத நிலைமை வந்துள்ளது.. இதனால் தங்க நகைகள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

தங்க நகை கொள்ளை சம்பவங்களில் வெளிமாநில கொள்ளையர்களும் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.. 10 நாட்களுக்கு முன்பு திருச்சியில் இப்படித்தான் ஒரு கும்பல் சிக்கியது.

Vizhupuram 2 5 Sovereign Gold Scooter 2 5

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த குணவந்த், மகேஷ் இருவரும் தங்க நகை கடை விற்பனை பிரதிநிதிகளாக உள்ளனர்.. இவர்கள் சில கடந்த மாதம், கிலோ கணக்கில் தங்க கட்டிகளை, சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நகை கடைகளில் விற்பனைக்காக தருவதற்கு காரில் சென்றார்கள்.

தங்க நகை வியாபாரிகள்

விற்பனையை முடித்துவிட்டு மிச்சமிருந்த ரூ.11 கிலோ மதிப்புள்ள 10 கிலோ தங்கக்கட்டிகளுடன் கடந்த 13ம் தேதி சென்னைக்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர்.
சமயபுரம் அருகே நள்ளிரவு கார் வந்தபோது, இவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள், அனைவர் மீதும் கண்களில் மிளகாய் பொடியை தூவிவிட்டு, காரில் வைத்திருந்த ரூ.11 கிலோ மதிப்புள்ள 10 கிலோ தங்க கட்டிகளையும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்,

இதுகுறித்த விசாரணையில், கொள்ளையடித்த 12 பேரும் ராஜஸ்தானை சேர்ந்த குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.

தங்கம், வெள்ளி கொள்ளை

இதேபோன்ற சம்பவம் நேற்று சென்னையிலும் சம்பவம் நடந்துள்ளது.. புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த 44 வயது சதீஷ்குமார் என்பவர் நகை வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் தொழில் விஷயமாக பெங்களூரு சென்றுவிட்டு ரயிலில் சென்னை திரும்பியபோது, ரூ.12 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் 5 கிலோ வெள்ளி பொருட்களை எடுத்து வந்திருக்கிறார்.. சென்ட்ரல் ஸ்டேஷன் வந்து பார்த்தபோது, பையில் வைத்திருந்த பணம், வெள்ளியை காணாமல் திடுக்கிட்டார்.

உடனே ரயில்வே போலீசில் புகார் அளிக்கவும், விசாரணையும் நடந்து வருகிறது.. அதாவது நேற்று, சதீஷ்குமார் பெங்களூரில் இருந்து புறப்பட்டதுமே, ரயிலில் அசந்து தூங்கிவிட்டாராம். அந்த நேரத்தில்தான் நகை கொள்ளை போனதாக தெரிகிறது.

ஸ்கூட்டரில் நர்ஸ் நித்யா

நேற்று விழுப்புரம் மாவட்டத்திலும் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.. விக்கிரவாண்டி அடுத்துள்ளது கப்பியாம்புலியூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வரும் சுபாஷ் என்பவரின் மனைவி நித்யா.. இவருக்கு 27 வயதாகிறது.

விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு 8.30 மணிக்கு டியூட்டி முடித்துவிட்டு, பஸ்சில் கோலியனூர் வந்திறங்கினார்.. பிறகு அங்கு நிறுத்தி வைத்திருந்த தனது ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கப்பியாம்புலியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

2.5 சவரன் தங்க தாலி

கப்பியாம்புலியூர் மேம்பாலம் அருகிலுள்ள சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென 2 மர்மநபர்கள் நித்யாவை வழிமறித்தனர்.. ஸ்கூட்டரை ஓரங்கட்டிய அந்த 2 பேரும், நித்யாவிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் கழுத்திலிருந்த இரண்டரை சவரன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்துவிட்டார்கள்.

இதை கொஞ்சமும் எதிர்பாராத நித்யா, திருடன் திருடன் என்று சத்தமிட்டவும், அருகிலிருந்தவர்கள் ஓடிவந்தனர். ஆனால், அதற்குள் திருடர்கள் 2 பேரும் ஓடிவிட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.2 லட்சமாகும். இதுகுறித்து நித்யா விக்கிரவாண்டி போலீஸில் புகார் தரவும், விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இரவு 8.30 மணிக்கு பிஸியான மேம்பாலத்தில் நடந்த இந்த திருட்டு சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+