விழுப்புரத்தில் காதல் தம்பதி.. முட்டாள்தனமாக யோசித்த ராஜகுமாரி.. யாருக்குமே நடக்கக்கூடாது
விழுப்புரம் : விழுப்புரம் அருகே உள்ள சோழகனூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சக்திபரதன் என்பவருக்கம், லட்சுமிபுரத்தை சேர்ந்த ராஜகுமாரி என்வருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சின்னதாக குடும்பத்தில் பிரச்சனை வந்துள்ளது. அப்போது அவர் கணவனிடம் கோபித்துக் கொண்டு கிணற்றை நோக்கி ஓடியுள்ளார். அப்போது தான் எதிர்பார்க்காத சம்பவம் தம்பதிக்கு நடந்தது.
விழுப்புரம் அருகே உள்ள சோழகனூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த தசரதன் மகன் சக்திபரதனுக்கு இவர் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு பால் வியாபாரம் மற்றும் விவசாயம் செய்து வந்தார். லட்சுமிபுரத்தை சேர்ந்த 23 வயதாகும் ராஜகுமாரி என்பவருடைய வீட்டுக்கு பால் விநியோகம் செய்தபோது அவருக்கும், சக்திபரதனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இவர்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர், இவர்களுக்கு 4 வயதில் பிரதாப் என்ற ஆண் குழந்தையும், இனியா (2) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். பிரதாப் அங்குள்ள ஒரு பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறான், இனியா அதே கிராமத்தில் உள்ள அங்கன்வாடிக்கு சென்று வருகிறாள்.
நேற்று காலை சக்திபரதன், பால் வியாபாரம் செய்து முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அவரது மனைவி ராஜகுமாரி, தனது மகன் பிரதாப்பை பள்ளியிலும், இனியாவை அங்கன்வாடியிலும் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். காலை 10 மணியளவில் சக்திபரதனுக்கும், ராஜகுமாரிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராஜகுமாரி, தனது கணவரிடம் வாழ்க்கையே வேண்டாம் என்று கோபமாக கூறிவிட்டு வீட்டின் பின்புறமுள்ள விவசாய கிணற்றை நோக்கி ஓடினார்.
உடனே சக்திபரதன், மனைவி ராஜகுமாரியை சமாதானப்படுத்த பின்தொடர்ந்து ஓடினார். அங்கு ராஜகுமாரி, தான் கழுத்தில் அணிந்திருந்த தாலியை கழற்றி அதனையும், தன்னுடைய செல்போனையும் வைத்துவிட்டு கிணற்றுக்குள் குதித்து தத்தளித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக்திபரதன், மனைவியை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்தார். ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாததால் சக்திபரதன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அடுத்த சில நிமிடங்களில் ராஜகுமாரியும் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் காணை போலீசாரும், விழுப்புரம் தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்து கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி இருவரது உடலையும் மீட்கும் பணியில் ஈடுபட்டர்கள். சுமார் 70 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 40 அடிக்கு தண்ணீர் இருந்தது. சுமார் 1 மணி நேரம் போராடி முதலில் சக்திபரதனின் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். வெகுநேரம் தேடியும் ராஜகுமாரியின் உடல் கிடைக்கவில்லை. பின்னர் மின் மோட்டார்கள் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீர் வெளியே இறைத்து, இரவு 7 மணி அளவில் ராஜகுமாரியின் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டார்கள், இருவரின் உடலையும் பார்த்து அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது.
பின்னர் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த பெண், வாழ்க்கையை முடித்துக் கொண்டதும் மற்றும் அவரை காப்பாற்றச் சென்ற கணவரும் இறந்த சம்பவத்தால்பரபரப்பு ஏற்பட்டது.சிறிய குடும்ப பிரச்சனைக்கு அவசர கோலத்தில் ராஜகுமாரி எடுத்த முடிவால் இன்று இருவருமே உயிருடன் இல்லை... குழந்தைகள் பெற்றோர்களை இழந்து தவிக்கிறார்கள்.
முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications