திண்டிவனத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலை.. சாவில் சந்தேகம் உள்ளதாக அக்காள் போலீசில் புகார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திண்டிவனத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலை- வீடியோ

    திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தனது தங்கை சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது அக்காள் போலீசில் புகார் அளித்துள்ளார்

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சிங்கனூரைச் சேர்ந்தவர் மாணிக்கவேல்(42), இவரது மனைவி ஜெய்ஹிந்த்தேவி(39). இவர் நெய்வேலி தெர்மல் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர்கள் திண்டிவனம் சேடன் குட்டை தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்கள்.

    நர்ஸாக இருந்த போது காதல்

    நர்ஸாக இருந்த போது காதல்

    மாணிக்கவேல்,ஜெய்ஹிந்த்தேவி தம்பதி கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருணம் செய்துள்ளார்கள். ஜெய்ஹிந்த்தேவி திண்டிவனத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அப்போது நர்ஸாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதற்கிடையே 2004ம் ஆண்டு போலீஸ் தேர்வில் வெற்றி பெற்று சப் இன்ஸ்பெக்டராக ஜெய்ஹிந்த்தேவி பணியில் சேர்ந்துள்ளார். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துள்ளார்கள். இவர்களுக்கு அபிதா(12), அட்சயா(6) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    தூக்கிட்டு தற்கொலை

    தூக்கிட்டு தற்கொலை

    இந்நிலையில் ஜெய்ஹிந்த்தேவி பதவி உயர்வு பெற்று இன்ஸ்பெக்டராக நெய்வேலி தெர்மல் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மாணிக்க வேலுக்கும், ஜெய்ஹிந்த்தேவிக்கும் கடந்த சில மாதங்காக அடிக்கடி சண்டை வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும். வீட்டுக்கு சென்றார் ஜெய்ஹிந்த்தேவி. அப்போது கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த ஜெய்ஹிந்த்தேவி படுக்கை அறையை உள்பக்கமாக பூட்டிவிட்டு சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    விழுப்புரம் எஸ்பி வருகை

    விழுப்புரம் எஸ்பி வருகை

    நேற்று காலை 7 மணிக்கு மாணிக்க வேல் கதவை தட்டியுள்ளார். கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஜெய்ஹிந்த் தேவி பிணமாக தொங்கி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், திண்டிவனம் டிஎஸ்பி கனகேஸ்வரி, மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதை கண்டுபிடித்தனர்.

    அக்காள் போலீசில் புகார்

    அக்காள் போலீசில் புகார்

    இதையடுத்து ஜெய்ஹிந்த் தேவியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்ககம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தனது தங்கையின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது அக்காள் ரேணுகா தேவி திண்டிவனம் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+