புது தாலியின் வாசம் கூட போகவில்லை.. பெண்ணின் உடம்பில் ஏறி இறங்கிய லாரி.. விழுப்புரம் அருகே பயங்கரம்!

சாலை விபத்தில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: புது தாலியின் வாசம் கூட மறையல.. ஆகி ஒரு வாரமே ஆனநிலையில், சாலை விபத்தில், இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் ஒரு என்ஜினியர். இவருக்கும் செம்படாக்குறிச்சியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் ஒரு வாரத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது.

Young woman died in Accident near Villupuram

இந்நிலையில், பாலமுருகன், பிரியதர்ஷினி மற்றும் பிரியதர்ஷினியின் தம்பி சந்தோஷ்.. இவர்கள் 3 பேரும் பைக்கில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்றுள்ளனர்.

சந்தோஷ் பைக்கை ஓட்டிவர, பின்னாடியே புதுமண தம்பதியும் உட்கார்ந்து சென்றுள்ளனர். அம்மன்நகர் அருகே வந்தபோது, எதிரே மின்னல் வேகத்தில் வந்த பைக் இவர்களது பைக்கில் பலமாக மோதியது. இதில், பிரியதர்ஷினி தூக்கி வீசியெறியப்பட்டு, நடுரோட்டில் போய் விழுந்தார்.

பாலமுருகனும், சந்தோஷும் ரோட்டோரம் விழுந்தனர். இதில் நடுரோட்டில் விழுந்த பிரியதர்ஷினி மீது மின்னல் வேகத்தில் வந்த லாரி ஒன்று அவரது உடல் மீது ஏறியது. பிரியதர்ஷினி சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த பாலமுருகன், சந்தோஷ் இருவரையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, பிரியதர்ஷினியின் உடலை மீட்டனர்.

இது சம்பந்தமாக விசாரணை நடத்தியதில், பைக்கில் வந்த 3 பேருமே ஹெல்மட் போடவில்லை என்று சொல்லப்படுகிறது. சாலைவிதிகளை இன்னமும் மீறுவதால், இதுபோன்ற துயர சம்பவம் அடிக்கடி நிகழ்வது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+