10 பேரின் உயிரை பறித்த விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து.. ஃபோர்மேன் கைது
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 4 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகினர். இந்த நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஃபோர்மேன் சுரேஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே குண்டாயிருப்பு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் அந்த கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள 50க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

பட்டாசு ஆலையில் 10க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. ஒவ்வொறு அறையிலும் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். நேற்றும் வழக்கம்போல் 30 க்கும் மேற்பட்டோர் அந்த பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தனர். அப்போது எதிர்பராத விதமாக மதியம் 12 மணியளவில் பட்டாசு ஆலையின் ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் அந்த அறையில் தீ பற்றி எரிந்ததுடன் அடுத்தடுத்து மற்ற அறைகளுக்கும் தீ பரவியது. இதில் ஏற்பட்ட தீ விபத்தில் அடுத்தடுத்து அறைகள் இடிந்து விழுந்தன. இதில் தீ விபத்து மற்றும் இடிபாடுகளில் சிக்கி ஊழியர்கள் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தில் 4 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில், ஒரு அறையில் மணி மருந்து எனப்படும் ரசாயன மூலப்பொருள் கலக்கும் போது தான் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் பலரும் 90 சதவிகித காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக அந்த ஆலையின் உரிமையாளர் விக்னேஷ், மேலாள ஜெயபால், ஃபோர்மேன் சுரேஷ் குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த ஆலையின் ஃபோர்மேன் சுரேஷ் குமார் (வயது 30) கைது செய்யப்பட்டார். போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 3 லட்சமும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சமும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். இதேபோல், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications