நயினாரை எதிர்க்கும்.. சாத்தூர் திமுக வேட்பாளரின் வீட்டில் 122 சவரன் நகை கொள்ளை.. யார் அந்த கும்பல்?
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டசபை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரனை எதிர்த்து திமுகவின் கடற்கரை ராஜ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுகவில் கடற்கரை ராஜ் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் அவரது வீட்டில் 122 சவரன் தங்கநகை மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் இரவோடு இரவாக கொள்ளையடித்து சென்றுள்ள நிலையில் அதுபற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக சாத்தூர் மாறி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த தொகுதி அமைந்துள்ளது. இந்த தொகுதி திடீரென்று முக்கியத்துவம் பெற முக்கிய காரணம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலிக்கு பதில் சாத்தூரில் போட்டியிடுவது தான்.

நயினார் நாகேந்திரனை எதிர்த்து திமுக சார்பில் கடற்கரை ராஜ் என்பவர் களமிறங்கி உள்ளார். இவர் கடந்த 2011ம் ஆண்டில் சாத்தூர் தொகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்பி உதயகுமாரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது மீண்டும் கடற்கரை ராஜ்க்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அனல் பறக்கும் பிரசாரம்
இவர் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் தீவிர விசுவாசி ஆவார். இந்த தொகுதியில் கேகேஎஸ்எஸ்ஆர் 6 முறை வென்றுள்ளார்.
இதனால் தனது ஆதரவாளரான கடற்கரை ராஜை வெற்றி பெற வைக்க கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் முயற்சித்து வருகிறார். அதேவேளையில் நயினார் நாகேந்திரனும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். நேற்று இரவு கடற்கரை ராஜ் தனது குடும்பத்தினருடன் சத்திரப்பட்டிக்கு பிரசாரத்துக்கு சென்றார்.
122 சவரன் நகை கொள்ளை
சாத்தூர் டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட வெங்கடசலாபுரத்தில் உள்ள வீட்டில் கடற்கரை ராஜின் மருமகள் வத்சலா குழந்தைகளுடன் இருந்தார். அப்போது வீட்டின் மொட்டை மாடி வழியாக உள்ளே நுழைந்த நபர்கள் பூஜை அறையில் இருந்த 122 சவரன் தங்க நகை, ரூ.45 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர். பூஜை இருந்த 800 கிராம் சில்வர் பொருட்கள் மட்டும் தப்பித்தது.
திருமண விழாவிற்கு செல்ல..
இதுபற்றி வத்சலா சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் கோவில்பட்டியில் திருமண விழா ஒன்று நடைபெற இருப்பதும், அந்த திருமண நிகழ்ச்சிக்கு செல்லும் வகையில் வங்கி லாக்கரில் இருந்து நகையை எடுத்து வந்து வீட்டு பூஜை அறையில் உள்ள கபோர்ட்டில் வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதனால் நகைகள் வீட்டில் வைக்கப்பட்டு இருப்பதை நன்கு அறிந்த நபர்களே இந்த கொள்ளை சம்பத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக சாத்தூர் டவுன் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications