3 ஏக்கர் நிலம்.. விருதுநகரை வியப்பூட்டிய ஆவணங்கள்.. சிவகாசி சார் பதிவாளர் அலுவலகத்தில் யாரந்த 5 பேர்
விருதுநகர்: நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், நில அபகரிப்பு மற்றும் போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி செய்யப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம்.. மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலும் இதுகுறித்து புகார் அளிக்கலாம். ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.. அதேபோல, போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த பதிவை ரத்து செய்ய முடியும் என்று தெரிந்தும் நில மோசடிகள் பெருகி வருகின்றன. விருதுநகரில் என்ன நடந்தது?
நிலம் மோசடிகள் நாளுக்கு நாள் பெருகி வருவதால், அவைகளை களைய பதிவுத்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எனினும் நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரங்களும், ஆவணங்களும் முக்கியம் என்பதால், போலி பத்திரங்களை தயார் செய்து, நிலமோசடி செய்வது அதிகரித்துவிட்டன. இந்த போலி பத்திரங்கள் கிட்டத்தட்ட நிஜஆவணங்களை போலவே தயார் செய்யப்படுகின்றன..
பத்திரப்பதிவு - நிலம்
பத்திரத்தை போலியாக தயாரிப்பதுபோலவே, ஆட்களையும் போலியாக செட் செய்து, நிலத்தை அபகரிக்கிறார்கள்.. எனவேதான், ஒருவரது பத்திரம் அசலா? நகலா? அது அவர்களின் பெயரில்தான் உள்ளதா? நிலத்தின் உரிமையாளர் யார்? என்பதை கண்டுபிடிக்கவே, http://ecview.tnreginet.net/ என்ற இணைய தள வசதியையும் அரசு செய்து தந்திருக்கிறது.
அதேபோல, சொத்துக்களை பத்திரப்பதிவு செய்தால், சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு நடப்பதை, அங்குள்ள வீடியோ மூலம் பதிவுசெய்து, பத்திரப்பதிவு செய்த நபருக்கே வீடியோவையும் அனுப்பி வைக்கும் நடவடிக்கையையும் பதிவுத்துறை கையில் எடுத்தது.
போலி ஆதார் நம்பர்
அப்படியிருந்தும், போலி பட்டா தயாரிப்புகளும், மோசடி ஆவணங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் போலியான ஆதார் எண்ணை வைத்து நிலமோசடி நடப்பது அதிர்ச்சியை தந்தது.. சமீபத்தில்கூட, செங்கல்பட்டு மாவட்டத்தில் இப்படி ஒரு மோசடி நடந்தது. வில்லங்கம் சரிபார்த்தபோது போலியாக ஆதார் எண் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது
இந்த வழக்கு ஹைகோர்ட் வரை சென்றது.. பிறகு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் எண்ணை சரிபார்த்ததில், ஆதார் எண் போலியானது என்பது அம்பலமானது.. இறுதியில், போலி ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்ய செங்கல்பட்டு சார் பதிவாளருக்கு ஹைகோர்ட் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
நிலமோசடி வழக்கு
இந்நிலையில், மீண்டும் ஒரு நிலமோசடி விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது.. சிவகாசி அருகே அனுப்பன்குளம் பகுதியில் பழனிச்சாமி, சுப்பையா ஆகியோருக்கு சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான இரண்டரை ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது.,,. இந்த நிலத்தை விற்பனை செய்ய கடந்த 16ம் தேதி 5 பேர் கொண்ட கும்பல் சிவகாசி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்திருக்கிறார்கள்.
கையோ சில ஆவணங்களையும் அவர்கள் கொண்டு வந்துள்ளனர்.. அந்த ஆவணங்களை சார்பதிவாளர் செந்தில்ராஜ்குமார் சரிபார்த்தபோது, அத்தனையும் போலியானவை என்று தெரியவந்தது.. ஆவணங்களுடன் வந்திருந்த 5 பேருமே போலியானவர்கள் என்பதும் ஆள்மாறாட்டம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
சுற்றி வளைத்த போலீஸ்
இதனால் அதிர்ச்சி அடைந்த சார் பதிவாளர், உடனடியாக சிவகாசி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், அதற்குள் அந்த 5 பேருமே தப்பியோடிவிட்டார்கள்..
பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவுக்கு முயன்ற ஆனந்தராஜ் (45), சிவக்குமார் (55), கருப்பசாமி (48), மகாராஜா (37), செல்வமணி (57) ஆகிய 5 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர்கள் 5 பேருமே தூத்துக்குடி, சிவகாசி பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications