நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள சட்டசபை தொகுதியில் நடிகை கவுதமி அதிமுக சார்பில் தயாராகி வந்தார். ஆனால் கடந்த முறையை போலவே அவருக்கு அங்கு சீட் வழங்கப்படவில்லை. அவர் ஏமாற்றப்பட்டுள்ளார். அந்த தொகுதி கூட்டணியில் உள்ள ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசியலில் இருக்கும் நடிகைகளில் ஒருவர் கவுதமி. இவர் பாஜகவில் செயல்பட்டு வந்தார். அதன்பிறகு கடந்த 2023ம் ஆண்டில் பாஜகவில் இருந்து விலகினார். பிறகு 2024ல் அதிமுகவில் இணைந்தார்.

நடிகை கவுதமிக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் சட்டசபை தேர்தல் நெருங்கிய நிலையில் அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் களமிறங்க தயாராகி வந்தார்.
ராஜபாளையத்திற்கு கவுதமி ஆர்வம்
இதற்காக அதிமுகவில் விருப்ப மனு அளித்தார். அதோடு அதிமுக தலைமை நடத்திய நேர்க்காணலிலும் பங்கேற்று ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கோரினார். இந்த முறை கவுதமிக்கு ராஜபாளையத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது. இப்படியான சூழலில் தான் நேற்று அதிமுக கூட்டணியில் பல்வேறு கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்யப்பட்டது.
ஜான்பாண்டியன் கட்சிக்கு ஒதுக்கீடு
அப்போது கூட்டணியில் உள்ள ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டது. ஜான்பாண்டியன் தென்மாவட்டங்களில் ஆதிதிராவிடர் மக்களின் குரலாக கட்சி நடத்தி வருகிறார். தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் அவருக்கு அவர் சார்ந்த ஆதிதிராவிடர் மக்களிடையே ஓரளவு செல்வாக்கு உள்ளது.
2வது முறையாக கவுதமி ஏமாற்றம்
இந்நிலையில் தான் ராஜபாளையம் பொதுத்தொகுதியாக இருந்தாலும் கூட ஜான் பாண்டியன் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் கணிசமான அளவுக்கு ஆதிதிராவிடர் மக்கள் உள்ளனர். ஜான்பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் போனதால் கவுதமிக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம் தொகுதியை நம்பி அதிமுக - பாஜக கூட்டணியில் கவுதமி ஏமாற்றமடைவது இது முதல் முறையல்ல. 2வது முறை.
கவுதமி ஆர்வத்தின் பின்னணி
ஏனென்றால் கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது கவுதமி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் இருந்தார். ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் கவுதமி. அதேபோல் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட ராஜூக்கள் சமூகத்தினர் ராஜபாளையம் தொகுதிக்குள் அதிகம் வசிக்கின்றனர். இதனால் அவரை பாஜக ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளராக நியமித்தது. கவுதமி களப்பணியை மேற்கொண்டு வந்தார்.
ஆனால் தேர்தல் நெருங்கிய நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியில் அப்போது சிட்டிங் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதிக்கு பதில் ராஜபாளையத்தில் (2021 சட்டசபை தேர்தலில் ராஜபாளையத்தில் ராஜேந்திர பாலாஜி தோல்வி) களமிறங்கினார். இதனால் கவுதமிக்கான வாய்ப்பு நழுவியது. கடந்த 2023ல் கவுதமி பாஜகவில் இருந்து விலக ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததும் ஒரு காரணமாக இருந்தது. இதனை அவரே வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.
ராஜேந்திர பாலாஜி தான் காரணமா?
இதனால் அதிமுகவில் இணைந்து ராஜபாளையத்தில் களமிறங்க நினைத்த அவருக்கு இந்த முறையும் ஏமாற்றமே கிடைத்துள்ளது. இதனால் கவுதமி மட்டுமின்றி ராஜபாளையம் தொகுதியில் உள்ள கவுதமியின் ஆதரவாளர்களும் அப்செட் ஆகி உள்ளனர். மேலும் கவுதமிக்கு சீட் வழங்காததற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் காரணம் என்று கூறப்படுகிறது. இருவரும் அதிமுகவில் பயணித்தாலும் கூட கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ராஜபாளையத்தில் நடந்த அதிமுக கூட்டங்களின்போது கவுதமிக்கு, ராஜேந்திர பாலாஜி அழைப்பு விடுக்கவில்லை. கவுதமிக்கு நல்ல பரிட்சயமான தொகுதி மற்றும் அதிமுகவின் கொள்ளை பரப்பு துணை செயலாளராக இருந்தும் கவுதமியை அழைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இந்த முறை ராஜேந்திர பாலாஜி மீண்டும் சிவகாசி தொகுதிக்கு மாறினாலும் ராஜபாளையத்தை பாஜக-வுக்கு தள்ளிவிடும் முடிவில் இருப்பதாக கூறப்பட்டது. அந்த வகையில் தற்போது தமிழக மக்கள் முன்னேற்ற கழகமான ஜான்பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கவுதமி 2வது முறையாக ஏமாற்றப்பட்டதற்கு ராஜேந்திர பாலாஜி தான் காரணமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications