வாக்களித்து வெற்றிபெற வைத்த வார்டு மக்களுக்கு கறிவிருந்து! அசத்திய அதிமுக கவுன்சிலர்!

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் வாக்களித்து வெற்றிபெற வைத்த வார்டு மக்களுக்கு அதிமுக கவுன்சிலர் கறிவிருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார்.

ஓட்டுக்கேட்க எப்படி வீடு வீடாக சென்றாரோ அதேபோல் கறிவிருந்தில் கலந்துகொள்ள வருமாறு வீடு தவறாமல் சென்று அழைத்திருக்கிறார் அதிமுக கவுன்சிலர்.

அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சொந்த ஊரான மல்லாங்கிணறு அருகே காரியாப்பட்டி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நகர்ப்புற உள்ளாட்சி

நகர்ப்புற உள்ளாட்சி

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் திருவிழா ஒரு வழியாக நேற்று முன் தினம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளோடு நிறைவு பெற்றது. இதையடுத்து இன்னும் 5 ஆண்டுகள் கழித்து தான் மீண்டும் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் திருவிழா நடைபெறும். இந்நிலையில் இப்போது நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் திமுக இமாலய வெற்றி பெற்ற நிலையில் அதிமுக வரலாறு காணாத வகையில் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழலிலும் தனக்கு ஓட்டுப்போட்டவர் மற்றும் ஓட்டுப்போடாதவர்கள் என வார்டுக்குட்பட்ட அனைவருக்கும் கறிவிருந்து கொடுத்து கவுரவித்திருக்கிறார் அதிமுக பெண் கவுன்சிலர் ஒருவர்.

கறி விருந்து

கறி விருந்து

விருதுநகர் மாவட்டம் காரியபாட்டி பேரூராட்சியில் 12-வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சத்தியபாமா திமுக வேட்பாளரை விட 201 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். இதையடுத்து தனது வெற்றியை கொண்டாடும் விதமாகவும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் திருமண மண்டபம் ஒன்றில் மட்டன், சிக்கன், என தடபுடல் கறிவிருந்து ஒன்றை கொடுத்து அசத்தியிருக்கிறார் அவர்.

 அழைப்பிதழ்

அழைப்பிதழ்

கறிவிருந்து வைக்கிறோம் வந்துவிடுங்கள் என பொத்தாம்பொதுவாக மைக்கில் அறிவிக்காமல், ஒவ்வொரு வீட்டிற்கும் படியேறிச் சென்று நன்றி தெரிவித்து விருந்துக்கான அழைப்பிதழை நேரில் கொடுத்திருக்கிறார் அதிமுக கவுன்சிலர் சத்தியபாமா. இதையடுத்து காரியாபட்டி 12-வது வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் பலரும் அந்த அழைப்பை ஏற்று விருந்தில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பேசு பொருளாக அமைந்திருக்கிறது.

அதிமுக தோல்வி

அதிமுக தோல்வி

தமிழக முழுவதும் அதிமுக வரலாறு காணாத வகையில் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையிலும் அதிமுக கவுன்சிலர் ஒருவர் இவ்வாறு தனது வெற்றியை கொண்டாடியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+