“அண்ணாமலை பேசியது தவறு”.. கண்டித்த மாஃபா பாண்டியராஜன்! அதிமுகவால் தனித்து போட்டியிட முடியும்!
விருதுநகர் : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக எம்.பி சிவி சண்முகத்தை மூன்றாம் கட்ட தலைவர் என்று விமர்சித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.
நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை அதிமுகவால் தனித்து போட்டியிட முடியும், கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக - அதிமுக இடையே வார்த்தை மோதல் முற்றி வருவது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தலைவர்கள் அடுத்தடுத்து அண்ணாமலையை விமர்சித்து வருவது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அதிமுக - பாஜக
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பாஜக 4 எம்.எல்.ஏக்களைப் பெற்றது. பின்னர் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, பாஜக தனித்து போட்டியிட்டன. அப்போது முதலே அதிமுக - பாஜக இடையே அரசியல் களத்தில் பல்வேறு கருத்து மோதல்கள் தென்பட தொடங்கின. இதற்கு இடையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்ததால் அதிமுகவில் குழப்பங்கள் நிகழ்ந்தன. திமுக அரசுக்கு எதிராக பாஜக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து, பிரதான எதிர்க்கட்சியைப் போலச் செயல்பட்டது.

சீண்டிய சிவி சண்முகம்
எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓபிஎஸ்ஸுடன் இணைந்து செயல்பட வேண்டும் என பாஜக மேலிடம் நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஈபிஎஸ், பாஜக கூட்டணியில் இருந்து விலக ரெடியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதையொட்டி, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், பாஜக கூட்டணி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி அமையும், தற்போது திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளவர்கள் கழற்றி விடப்படுவார்கள் என்று பேசி இருந்தார் அதிமுக எம்.பி சி.வி.சண்முகம்.

திமுக + பாஜக கூட்டணி
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சிக்கு எதிராக அதிமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய சிவி சண்முகம், திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கப்போகிறது. அதனால் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக கழற்றி விடப் போகிறது. திமுகவிடம் எங்களுடன் கூட்டணி வையுங்கள் அல்லது காங்கிரஸ் கட்சியை கழட்டி விடுங்கள் என்று பாஜக கூறுகிறது என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் சிவி சண்முகம்.

3ஆம் கட்ட தலைவர்
சிவி சண்முகத்தின் இந்த பேச்சுக்கு பதில் அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எந்தக் கட்சி எந்தக் கட்சியோடு கூட்டணி வைக்கும் என்று அந்தந்த கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள் பேசினார்கள் என்றால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. யாரோ மூன்றாம் கட்ட தலைவர்கள் பாஜக - திமுக கூட்டணி அமையப்போகிறது என்று சொன்னால் அதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்திருந்தார் அண்ணாமலை.

ஆட்சி அமைக்கவே கட்சி நடத்துகிறோம்
பாஜக கூட்டணி பற்றி பேசுகிறார் என்றால் அவர் பாஜகவில் சேர்ந்து இருக்க வேண்டும் அல்லது திமுகவில் சேர்ந்து இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நான் பதில் சொல்கிறேன். பாஜக இங்கே கட்சி நடத்துவது தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதற்காகத்தான் நாங்கள் எங்கள் கட்சியை நடத்துகிறோம். ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளை போல நாமும் அப்படியே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்ற எண்ணம் எங்களுக்குக் கிடையாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதிமுக மாஜி அமைச்சர் கண்டனம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சிவி சண்முகத்தை மூன்றாம் கட்ட தலைவர் என்று விமர்சித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த தாயில்பட்டியில் திமுக அரசின் பல்வேறு விலை உயர்வு, கட்டண உயர்வுகளைக் கண்டித்து அதிமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன் அண்ணாமலையின் கருத்தை விமர்சித்துள்ளார்.

அண்ணாமலை பேச்சு தவறு
மாஃபா பாண்டியராஜன் பேசுகையில், நெய்வேலி என்எல்சியில் நிலகம் கையகப்படுத்துவதில் மத்திய அரசு தவறை செய்கிறது. ஆனால் இந்த நில எடுப்பு என்பது மாநில அரசு மூலம் நடைபெறுகிறது. இதை வைத்துத்தான் பாஜகவும் திமுகவும் கூட்டணியாக செயல்படுகிறார்கள் என்ற சந்தேகத்தில் சிவி சண்முகம் அந்த கேள்வியை எழுப்பினார். அதற்காக சி.வி.சண்முகத்தை மூன்றாம் கட்ட தலைவர் என்று அண்ணாமலை பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வளரக்கூடிய அரசியல் தலைவர், அவர் இப்படி பேசக்கூடாது எனக் கூறியுள்ளார்.

தனித்து போட்டியிட முடியும்
மேலும் பேசிய மாஃபா பாண்டியராஜன், எந்த உறவை எந்த நேரத்தில் ஏற்படுத்த வேண்டுமோ அதை எடப்பாடி பழனிசாமி சரியான நேரத்தில் ஏற்படுத்துவார். நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை அதிமுகவால் தனித்து போட்டியிட முடியும். அதே நேரம் பாஜகவை இன்னும் தோழமைக் கட்சியாகத் தான் பார்க்கிறோம், கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில்
மேலும் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் பட்டாசு தொழில் முடங்கி, பட்டாசு உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. பட்டாசு தொழிலில் உள்ள பிரச்சனைகளை தீர்க்காமல் திமுக அரசு ஒதுங்கி நிற்கிறது எனத் தெரிவித்தார்.
-
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி!












Click it and Unblock the Notifications