கடவுளே.. கோவையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பறந்த ஹெலிகாப்டர்! உள்ளே யாரு, ஏன் போனாருன்னா பாருங்க
விருதுநகர்: வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.மீண்டும் வெற்றி பெற வேண்டி கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஆண்டாளை வழிபட சென்றுள்ளார் அ.தி.மு.க.நிர்வாகி ஒருவர்.
Recommended Video
பக்தியில் பல வகை உண்டு. அலகு குத்துவது, அங்கபிரதட்சணம் செய்வது என உடலை வருத்தி செய்யும் வேண்டுதல்கள் ஒரு வகை. மொட்டையடிப்பது, பால் குடம் எடுப்பது போன்ற வேண்டுதல்களும் பலரும் செய்வது.
ஆனால், அதிமுக நிர்வாகி ஒருவர் பக்தி வித்தியாசமானது. அது மட்டுமல்ல அவர் கட்சியின் மீது வைத்துள்ள பாசத்தையும் இதை பறைசாற்றியுள்ளது.

அபிஷேகம்
கோவையை சேர்ந்தவர் விஷ்ணு பிரசாத். அ.இ.அ.தி.மு.கட்சியின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் கழக துணை செயலாளரான இவர் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.மீண்டும் வெற்றி பெற வேண்டி கோவையிலிருந்து ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடத்த வேண்டி தனது குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரில் சென்றுள்ளார்.

வாடகை ஹெலிகாப்டர்
கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள தனியார் ஹெலிகாப்டர் வாடகை மையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று சிறப்பு வழிபாடுகள் செய்து விட்டு மீண்டும் ஹெலிகாப்டரிலேயே கோவை திரும்பி உள்ளார்.

மூன்றாவது முறை
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மூன்றாவது முறையாக தொடர்ந்து, அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்திட வேண்டி இது போன்று சிறப்பு வழிபாட்டை செய்துள்ளதாக தெரிவித்தார்.

முதல் நபர்
கோவையில் இருந்து இது போன்று வாடகைக்கு ஹெலிகாப்டரை எடுத்துக் கொண்டு, பறந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றிய முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா நோயச்சம் காரணமாக இவ்வாறு அவர் ஹெலிகாப்டரை பயன்படுத்தினாரா என்பது குறித்து அவர் கூறவில்லை.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications