"தங்கச்சி" முறை.. 10 வயசு பிஞ்சு வேற.. ஒதுக்குப்புறத்தில் நடந்த கொடுமை.. டிரைவரை தட்டிதூக்கிய போலீஸ்
தங்கையை அண்ணன் பலாத்காரம் செய்துள்ளார்
விருதுநகர்: தங்கச்சி அதாவது பெரியம்மா மகளையே நாசம் செய்துவிட்டார் அந்த கார் டிரைவர்.. இத்தனைக்கும் அந்த தங்கைக்கு வயது வெறும் 10தான்..!
மதுரையை சேர்ந்தவர் ராஜா... இவர்தான் அந்த கார் டிரைவர்.. ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.. இவரது பெரியம்மா மகளுக்கு 10 வயதுதான் ஆகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கொடுமை நடந்துள்ளது.. கூல்டிரிங்ஸ் வாங்கி தருவதாக சொல்லி, தங்கச்சியை பைக்கில் அழைத்து சென்றுள்ளார்..

சிறுமி
ஆனால், அன்னைக்கு முழுக்க அந்த குழந்தை வீட்டுக்கு வரவே இல்லை.. ராஜா மட்டும்தான் வந்தார்.. இதனால், ராஜாவிடம் சிறுமியின் பெற்றோர் குழந்தை எங்கே என்று கேட்டுள்ளனர்.. அதற்கு அவர் எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி உள்ளார். உன்கூட தானே பைக்கில் கூட்டி சென்றாய் என்று கேட்டதற்கும் அவர் மழுப்பலான பதிலை சொல்லி இருக்கிறார்.

விசாரணை
இதனால், அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோர், ராஜா மீது அவனியாபுரம் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் ராஜாவை அழைத்து விசாரித்தனர்.. போலீசாரிடமும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தார் ராஜா... இதனிடையே, போலீசாருக்கு, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஸ்டேஷனில் இருந்து ஒரு போன் வந்தது..

மயக்க மாத்திரை
அதில், காரியாபட்டி புறநகர் பகுதியில் ஒரு சிறுமி தனியாக அழுது கொண்டிருந்ததாகவும், அதை கண்ட அந்த பகுதி மக்கள் குழந்தையை தங்களிடம் கொண்டு வந்து ஒப்படைத்ததாகவும் சொன்னார்கள். அப்போதுதான், அந்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.. குழந்தைக்கு ஜூஸ் வாங்கி தருவதாக சொல்லி பைக்கில் அழைத்து ராஜா, அந்த ஜூஸில் மயக்க மாத்திரைகளை கலந்து தந்துள்ளார்..

கண்ணீர்
மயங்கிகிடந்த சிறுமியை காரியப்பட்டியில் உள்ள ஒரு ஆள் இல்லாத பகுதிக்கு சென்றுள்ளார்... அங்கு பாதி மயக்கத்தில் இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது வலி தாங்காமல் சிறுமி விழித்துக்கொள்ளவே பதறிப்போய் உள்ளார் ராஜா.. தங்கையை அங்கேயே விட்டுவிட்டு அவனியாபுரத்துக்கு வந்துள்ளார்.. அப்பகுதியில் கதறி அழுது கொண்டிருந்த சிறுமியை கண்ட அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்து காரியாபட்டி ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளனர்.

வாக்குமூலம்
இந்நிலையில், அவனியாபுரம் போலீசார் சிறுமியை மீட்டனர், வாக்குமூலத்தையும் பெற்றுக்கொண்டனர்.. ராஜா மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து கைது செய்து தூக்கி உள்ளே வைத்துள்ளனர்.. தங்கை முறை கொண்ட குழந்தையை அண்ணனே கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications