வேறு சாதி.. வெடித்த காதல் பிரச்சனை.. ராஜபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே மரத்தில் பிணமாக தொங்கிய இளைஞர்
ராஜபாளையம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
விருதுநகர்: தான் காதலித்த வேறு சாதி பெண்ணை, வீட்டை விட்டு இளைஞர் அழைத்து சென்றிருந்த நிலையில், தற்போது அவர் மரத்தில் பிணமாக தொங்கி உள்ளார்.. இது கொலையா? தற்கொலையா? என ராஜபாளையம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ளது அக்கரைப்பட்டி கிராமம்... இங்கு வசித்து வந்தவர் மகேந்திரன்.. 23 வயதாகிறது.. இவர் ஒரு கொத்தனார்.. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். 2 பேரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இதனால் வீட்டில் கல்யாணத்துக்கு மறுப்பு சொல்வார்கள் என்று நினைத்து 2 பேருமே வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.. அதன்படி, மகேந்திரன் தன் காதலியை ராஜபாளையம் புது பஸ் ஸ்டேண்ட் அருகில் உள்ள தன் பெரியம்மா வீட்டிற்கு அழைத்து வந்தார்.
இதனிடையே பெண்ணை காணாமல், அவர்கள் வீட்டில் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. அந்த புகாரின் பேரில், மகேந்திரனும், காதலியும் நேற்று மதியம் ஸ்டேஷன் சென்றனர்.. அப்போது, பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைக்க போலீசார் வலியுறுத்தியதாக தெரிகிறது... காதலியை அவர்களுடன் ஒப்படைத்துவிட்டு தன் பெரியம்மா வீட்டுக்கு சோகமாக வந்தார் மகேந்திரன்.
ஆனால் நேற்று சாயங்காலம் முதல் மகேந்திரனை காணவில்லை.. அதனால் உறவினர்கள் பதட்டமடைந்து பல இடங்களில் தேடினர்.. இன்று காலை ராஜபாளையம் புது பஸ் ஸ்டேண்ட் அருகே உள்ள ஒரு மரத்தில் மகேந்திரன் சடலமாக தொங்கி கொண்டிருப்பதாக தகவல் வந்தது.. ராஜபாளையம் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேந்திரன் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தற்கொலையா கொலையா என தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது. ஆனால் மகேந்திரனின் உறவினர்களோ "பெண் வீட்டில் போனில் மிரட்டினர்.. அப்பறம்தான் இந்த கொலை நடந்துள்ளது.. இதை கொலை வழக்காக போலீசார் பதிய வேண்டும்" என போலீசாரிடம் வலிறுத்தி வருகின்றனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications