நிச்சயதார்த்த பெண்ணுக்கு கொரோனா.. கிலியில் 50 பேர்.. அதிர்ச்சியில் அதிகாரிகள்.. விருதுநகரில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் திருமண நிச்சயதார்த்தம் நடத்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், அதில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் தாலுகா அலுவலகம் முன்பு உள்ள விதை உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் 25 வயது பெண் பணியாற்றி வருகிறார். இவர் காரியாபட்டி பாண்டியன் நகரை சேர்ந்தவர் ஆவார்.

Corona to the woman who was wedding engaged, Problem with 50 people who participated

இந்நிலையில் இதே அலுவலகத்தில் பணியாற்றி வரும் கோவில் பட்டியைச் சேர்ந்தவருக்கு 20 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் மற்றும் நிறுவனர் மற்றும் பணியாளர்களுக்கு சோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையின் முடிவில் விதை உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் பணிபுரிந்த 25 வயது பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை சுகதாரத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அந்த பெண்ணை அழைத்து செல்வதற்காக வீட்டிற்கு சென்றனர். அப்போது அந்த பெண்ணிற்கு நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்டோரையும் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். அத்துடன் அந்த பெண் வசித்து வந்த பாண்டியன் நகர் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+