சிவகாசியில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை..உடல் கருகி உயிரிழந்த 2 பேர்..இருவர் பலத்த காயம்
விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 2 பெண்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டியில் பிரவீன் ராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்ற இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இன்று காலையில் வழக்கம்போல் இந்த பட்டாசு ஆலையில் 120 பணியாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தரை சக்கர பட்டாசுக்கான ரசாயன மூலப்பொருட்களை செலுத்தி கொண்டிருந்த இடத்தில் ரசாயன மூலப்பொருளில் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடித்தது. இதில் ஒரு அறை இடிந்து தரைமட்டமானது.
இந்த விபத்தில், இடையங்குளத்தை சேர்ந்த தங்கவேல்,55, கருப்பசாமி,32 ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாரித்தாய், கருப்பம்மாள் ஆகியோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிக அளவில் தீ காயம் ஏற்பட்டுள்ளதால் கவலைக்கிடமான நிலையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடி விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகாசியில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. கோடை காலமாக இருப்பதால் விபத்துகள் அதிக அளவில் நிகழ வாய்ப்பு உள்ளது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பட்டாசு ஆலைகளில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications