அழகான.. வசதியான பெண்ணை கல்யாணம் செஞ்சுக்கங்க.. கணவருக்கு அஸ்வினி உருக்கமான கடிதம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாமனார் மாமியார் கொடுமையால் 2 குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு தற்கொலை செய்த அஸ்வினி தனது கணவருக்கு உருக்கமாக எழுதிய கடிதம் சிக்கி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபளையாம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மூத்த மகள் அஸ்வினி வயது 29. இவருக்கும் சிவகிரியைச் சேரந்த சிவகக்தி வேல மகன் அருணாச்சலத்துக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவருடன் கருத்து வேறபாடு காரணமாக அஸ்வினி தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசிக்கிறார்.

நேற்று முன்தினம்
பெற்றோர் இருவரையும் சேர்த்து வைக்க மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்ததால் நேற்று முன்தினம் இரவு கணவருக்கு உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடிதம் எழுதியுள்ளார்
அந்த கடிததத்தில் தனது தற்கொலைக்கு கணவரின் தாய் சிகாமி சுந்தரி, கணவரின் தந்தை சிவகக்திவேலு மற்றும் கணவரின் தங்கை மகேஸ்வரி ஆகியோர் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

வருந்துகிறேன்
அஸ்வினி தனது கணவர் அருணாச்சலத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, எனது அருமை கணவருக்கு.. உங்களுக்கு பிடித்த நெருக்கமானவர்களுக்காக என்னை கைவிட்டு விட்டதை போல் நம் குழந்தைகளையும் கைவிட்டு விடாதீர்கள். அவர்கள் நம்மை நம்பி பிறந்தவர்கள். பாதியில் விட்டுவிட்டு போவதற்கு வருந்துகிறேன்.

திருமணம்
வேறு வழியில்லை. உங்கள் அம்மா, அப்பா, தங்கை கூறியது போல் அழகான, நல்ல, வசதியான வீட்டு பெண்ணை திருமணம் (மறுமணம்) செய்து கொண்டு நிம்மதியாக வாழ வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சாலை மறியல்
இதற்கிடையே வழக்கு பதிவு செய்துள்ள ராஜபாளையம் தெற்கு காவல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னதாக அஸ்வினி தற்கொலைக்கு காரணமாக குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications