இது முடிவல்ல! இதுதான் ஆரம்பம்! விருதுநகர் தோல்வி குறித்து விஜய பிரபாகரன் கருத்து
சென்னை: இது முடிவல்ல, தொடக்கம்தான் என விருதுநகர் லோக்சபா தேர்தலில் தோல்வியுற்றது குறித்து தேமுதிகவை சேர்ந்த விஜயபிரபாகரன் பதிவு செய்துள்ளார்.
விருதுநகர் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்று வென்றுள்ளார். இவரை தொடர்ந்து தேமுதிகவின் விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளை பெற்று வெறும் 4,379 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகாவோ 1,66,271 வாக்குகளை பெற்று 3ஆவது இடத்தை பெற்றார். மாணிக்கம் தாகூருக்கு கடுமையான டஃப் கொடுத்தார் விஜய பிரபாகரன். சுருக்கமாக சொல்ல போனால் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு பயம் காட்டினார் என்றே சொல்லலாம். கடைசியில் நடந்த ட்விஸ்ட்டாக விஜய பிரபாகரன் குறைந்த வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு கூட மாணிக்கம் தாகூரை எதிர்த்து போட்டியிட்ட அழகர்சாமி ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். ஆனால் விஜய பிரபாகரனோ குறைந்த அளவு வித்தியாசம்தான். எனினும் முதல் தேர்தலிலேயே விஜய பிரபாகரனுக்கு இத்தனை லட்சம் பேரின் நம்பிக்கை, வாக்குகளாக கிடைத்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து விஜய பிரபாகரன் தனது பதிவில் கூறியிருப்பதாவது: குறைந்த அளவிலான வித்தியாசத்தில் தோல்வியுற்றதற்கு மன்னிக்கவும். எனக்கு வாக்களித்த அனைத்து அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி. இது முடிவல்ல! இதுதான் ஆரம்பம் என பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த 39 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றுள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் (தனித்து) என 4 முனை போட்டி நிலவியது.
தேமுதிகவை பொருத்தமட்டில் விஜயகாந்தின் பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரம் என்பதால் விஜய பிரபாகரன் அங்கு போட்டியிட்டார். விஜயகாந்த் நாயுடு சமூகம் என்பதால் அங்கு அந்த சமூகத்து மக்கள் அதிகம் என்பதாலும் விஜய பிரபாகரனுக்கு சாதகமான தொகுதியாக பார்க்கப்பட்டது.
மாணிக்கம் தாகூர் தொகுதி பக்கமே வரவில்லை என்ற ஒரு விமர்சனம் இருந்தது. அது போல் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரும், பிரச்சாரத்தின் போது நீட் விவகாரத்தில் கேள்வி எழுப்பிய பெண்ணிடம், அதை நிறுத்த முடியாது என கறாராக தெரிவித்தார். மேலும் பாஜக வேட்பாளர் என்பதும் ராதிகாவும் மைனஸாக இருந்தது. இவையெல்லாம் சேர்ந்து விஜய பிரபாகரனுக்கு நல்லதொரு தொடக்கத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தோல்வி அடைந்துவிட்டார்.
விஜயகாந்தின் அனுதாப ஓட்டுக்கள் விஜய பிரபாகரனுக்கு இந்த அளவுக்கு கிடைத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இளைஞரான விஜய பிரபாகரனுக்கு இது நல்லதொரு வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
-
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications