ஆதரவற்ற 231 குழந்தைகளுக்கு தீபாவளி டிரெஸ் எடுத்துக் கொடுத்த திமுக MLA! மொத்தச் செலவு ரூ.3,15,000!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், ஆதரவற்ற 231 குழந்தைகளுக்கு தீபாவாளி பண்டிகையை ஒட்டி புத்தாடைகள் வாங்கிக் கொடுத்துள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளாக தனது சட்டமன்ற உறுப்பினர் மாத ஊதியத்தில் இருந்து தொடர்ச்சியாக புத்தாடைகள் வாங்கிக் கொடுத்து வரும் இவர், இந்தாண்டு 7வது முறையாக புத்தாடைகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார். மூன்று மாத ஊதியத்தை மொத்தமாக சேர்த்து வைத்த அவர், ரூ.3,15,000 செலவில் புத்தாடைகள் வாங்கிக் கொடுத்துள்ளார்.

திமுக எம்.எல்.ஏ: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தங்கபாண்டியன். 2வது முறை சட்டமன்ற உறுப்பினராக உள்ள இவர் இந்தாண்டுடன் சேர்த்து 7 ஆண்டுகளாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவாளி புத்தாடைகள் வாங்கிக் கொடுத்து வருகிறார். ராஜபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், பொன்னகரம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், Light of life குழந்தைகள் காப்பகம் , என 3 ஆதரவற்றோர் காப்பகங்களை சேர்ந்த 231 குழந்தைகளை தன்னுடன் ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்ற அவர் அவர்கள் விரும்பிய புத்தாடைகளை வாங்கி தந்துள்ளார்.
ஆதரவற்ற காப்பகத்தை சேர்ந்த பிள்ளைகளை தனது சொந்தப் பிள்ளைகள் போல் கருதி அவ்வப்போது அவர்களுக்கு தேவையான உதவிகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆதரவற்ற குழந்தைகளும் ஆனந்தமாக தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதற்காக புதிய ஆடைகள் வாங்கித் தந்த திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆதரவற்ற குழந்தைகள் தானே கொடுப்பதை வாங்கிக் கொள்ளட்டும் என்று நினைக்காமல் அவர்களையும் ராஜபாளையத்தில் உள்ள ஆனந்தம் சில்க்ஸ் துணிக்கடைக்கு அழைத்துச் சென்று யார் யாருக்கு என்னென்ன ஆடைகள் பிடித்ததோ அந்த ஆடைகளை விலையை பற்றி கவலைப்படாமல் வாங்கிக் கொடுத்துள்ளார் திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications