விருதுநகர் அருகே இரட்டை கொலை... தொடரும் பதற்றம்! உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை
விருதுநகர்: வச்சக்காரபட்டி அருகே தடங்கம் கிராமத்தில் ஆடு மேய்க்கும் இரண்டு நண்பர்கள் நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் வச்சக்காரபட்டி அருகே அமைந்துள்ளது தடங்கம் கிராமம். இப்பகுதியை சேர்ந்த சந்தனக்குமார்(22) மற்றும் அவரது நண்பர் மணிகண்டன்(19) ஆகியோர் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றிரவு சந்தனக்குமாரும் அவரது நண்பர் மணிகண்டனும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இரட்டை கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வருகின்றனர். சந்தனக்குமாரின் தந்தையுடைய சகோதரர் மகனான மற்றொரு மணிகண்டன்(26) என்பவருக்கும் சந்தனகுமாருக்கும் ஆடு மேய்க்கும் தொழிலில் முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு சந்தனகுமார் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த உறவினர் மணிகண்டன் சந்தனகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், பின்னர் வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக போலீசார் கூறுகின்றனர்.
திடீரென கையிலிருந்த அரிவாளால் சந்தனகுமார் மற்றும் அவரது நண்பர் மணிகண்டன் ஆகியோரை வெட்டியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கொலை செய்த மணிகண்டன் தப்பி ஓடிவிட்டதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications