'பைபிள்' பரிசளித்த கிறிஸ்தவர்கள்.. சட்டென அண்ணாமலை செய்த செயல்.. வீடியோவை பாருங்க
விருதுநகர்: விருதுநகரில் ஒருவர் "குர்-ஆன்" பரிசளித்தார். அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்த செயல் "என் மண் என் மக்கள்" யாத்திரையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண்,என் மக்கள்' யாத்திரை சென்று வருகிறார். கடந்த ஜூலை 28-ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் ராமேசுவரத்தில் இந்த யாத்திரை தொடங்கி வைக்கப்பட்டது.

அண்ணாமலையின் இந்த யாத்திரை ஒவ்வொரு நாளும் கிராமப் பகுதிகளில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், நகர்ப்புறங்களில் 4 தொகுதிகளையும் கடக்கும் வகையிலும் நடந்து வருகிறது. முதல்கட்டமாக 200 நாட்களுக்கு யாத்திரையை நடத்தப்படுகிறது. இதில் அண்ணாமலையுடன் பயணிக்க ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராமேஸ்வரத்தில் தொடங்கிய 'என் மண்,என் மக்கள்' யாத்திரை ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் சென்றது. அதன்பின்னர் அந்த யாத்திரை மீண்டும் சிவகங்கை மாவட்டம் வழியாக மதுரைக்கு வந்தது. மதுரையை தொடர்ந்து விருதுநகரில் தற்போது யாத்திரை சென்று கொண்டிருக்கிறது.
விருதுநகரில் கிறிஸ்தவர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பைபிள் பரிசளித்தனர். உடனே அண்ணாமலை பைபிளை வாங்கி கண்ணில் வைத்து ஒத்திக்கொண்டார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் யாத்திரை நடந்த போது, காரைக்குடி செக்காலை சாலை பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய இளைஞர் ஒருவர் "குர்-ஆன்" பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார். உடனே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குரானை கண்ணில் வைத்து ஒத்திக்கொண்டார். அண்ணாமலையின் காரைக்குடி நடை பயணத்தின் போது, பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா உடன் இருந்தார்.
பைபிளை பரிசளித்த கிறிஸ்தவர்கள்.. கண்ணில் வைத்து ஒற்றிக்கொண்ட அண்ணாமலை..! #Annamalai #EnMannEnMakkal #Virudhunagar #bible pic.twitter.com/xS5IKzmWTj
— velmurugan (@velmurugantheni) August 10, 2023


Click it and Unblock the Notifications
