சிவகாசியில் வெடித்துச் சிதறிய பட்டாசுகள்.. அப்படியே தரைமட்டமான கட்டிடம்.. 3 பேர் மாயம்.. பரபர தகவல்
விருதுநகர்: சிவகாசியில் உள்ள நேருஜி நகரில் உள்ள குழாய் கம்பெனியில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்து சிதறியதில் கட்டிடம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது -
விருதுநகர் சிவகாசியில் உள்ள நேருஜி நகரில் சுமார் 3500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பஞ்சவர்ணம் என்பவருக்குச் சொந்தமான கட்டிடம் உள்ளது.
இதில் கீழ் தளத்தில் ராமநாதன் என்பவருக்குச் சொந்தமான குழாய் கம்பெனியும் மேற்தளத்தில் குடும்பத்தினரும் வசித்து வந்துள்ளனர்.

தீபாவளி சமயத்தில் தனது கம்பெனி இருக்கும் கட்டிடத்தில் ராமநாதன் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை இருப்பு வைத்து, அங்கிருந்து விற்பனைக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து எவ்வித அனுமதியும் பெறவில்லை.
தீபாவளி முடிந்த பிறகும் கூட பட்டாசுகளின் மூலப்பொருட்கள் எவ்வித அனுமதியும் இல்லாமல் அங்குச் சேமித்து வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் மாலை 3 மணியளவில் அங்குச் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் கட்டிடம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது.
இந்த விபத்தில் வேல்முருகன், மனோஜ் குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போன 3 பேரைத் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
வீட்டின் இடிபாடுகளை பொக்லைன் மூலம் அகற்றி 5 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், இடிந்த கட்டடத்தில் தொடர்ந்து பட்டாசுகள் வெடிப்பதால் மீட்புப் பணிகள் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராமநாதன் என்பவர் தலைமறைவாக உள்ள நிலையில், இந்த வெடி விபத்து குறித்து சிவகாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications