விருதுநகர் அசந்துடுச்சு.. காரியாப்பட்டி பஸ் ஸ்டாண்டுல "புதுஸா" கிளம்பியிருக்கே.. பாத்தீங்களா? செம
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டியானது, ஒட்டுமொத்த இணையத்தையும் தன்பால் திரும்பி பார்க்கவைத்து வருகிறது.. என்ன காரணம்?
3 மாதங்களுக்கு முன்பு, ரூ.10 இருந்தால் போதும் அளவில்லா சாப்பாடு கிடைக்கும் என்ற அறிவிப்புடன் ஈரோட்டில் புதிய உணவகம் திறக்கப்பட்டது..
ஈரோடு பிரப் சாலையில், ஆற்றல் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தில் சார்பில் 10 ரூபாய்க்கு ஓட்டல் திறக்கப்பட்டது.. இந்த ஓட்டலின் பெயரே "ஆற்றல் உணவகம்"தான்.

அன்லிமிட்டெட்: அன்-லிமிட்டெட் உணவு 10 ரூபாய் என மூன்று வேளையும் செயல்படும் ஓட்டலை, ஆற்றல் பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டிருக்கிறது. காலை சிற்றுண்டி, மதியம் பொரியலுடன் சாப்பாடு, இரவு டிபன் என 3 வேளையும் செயல்படும் இந்த உணவகத்தில், ஒருவேளைக்கு 10 ரூபாய் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், உணவை வீணாக்கக்கூடாது என்ற நிபந்தனையுடனும் இந்த உணவை தருகிறார்கள். இதனால், பல்வேறு பகுதி மக்கள் இந்த ஹோட்டலை தேடி வருகிறார்கள். வாரத்தின் 7 நாட்களுமே, மாதத்தில் 30 நாட்களும் என இந்த ஹோட்டல் செயல்படுகிறது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சாப்பிட்டு போகலாம்.. கிட்டத்தட்ட அம்மா உணவகம் போலவே இந்த ஓட்டலை தொடங்கி நடத்தி வருவதாக சொல்கிறார்கள்.. ஒருவேளைக்கு 500 பேருக்கு மேல் வந்துபோகிறார்களாம்.
விருதுநகர்: இந்நிலையில், இதுபோலவே, விருதுநகரிலும் ஒரு முயற்சி பரவலாக பேசப்பட்டு வருகிறது. காரியாபட்டி பஸ் ஸ்டாண்டு அருகே அமைந்துள்ளது இந்த இன்பம் உணவகம்.. 6 வருடங்களுக்கு முன்பு, இப்படி முயற்சியை கையில் எடுத்தவர், இந்த உணவகத்தின் ஓனர் விஜயகுமார் மற்றும் அவரது அக்கா தமிழரசி போஸ் ஆகியோர்தானாம்.
இவர்களின் நன்முயற்சியால் காரியாபட்டியின் சுற்றிவட்டார கிராம மக்கள், பெரும் வரவேற்பை இந்த ஓட்டலுக்கு தந்துவருகிறார்கள். இந்த 6 வருட காலத்தில் எத்தனையோ முறை விலைவாசி உயர்வுகள் இருந்தபோதும்கூட, இந்த ஓட்டலில் சாப்பாட்டு விலையை உயர்த்தவில்லையாம். சாம்பார் சாதம், தயிர் சாதம், புளி சாதம், தக்காளி சாதம் போன்றவற்றை 10 ரூபாய்க்கு தருகிறார்கள்.. அதுமட்டுமல்ல, இந்த ஓட்டலில் டீ வெறும் 5 ரூபாய் மட்டுமே.. சுடச்சுட வடை 5 ரூபாய்க்கு கிடைக்கிறது.
தழைக்கும் மனிதம்: இதில் வரவேற்கத்தக்க விஷயம் என்னவென்றால், ஆதரவற்றோர், எளியோர், மனநலம் குன்றியோர், திருநங்கைகள், யாசகம் செய்வோர் என யாராக இருந்தாலும், பசி என்று வந்துவிட்டால், வயிறு நிறைய சாப்பாடு போட்டு அனுப்புகிறது இந்த இன்பம் உணவகம்.. அதுவும் இலவசமாக.. சூப்பர்ல.. இந்த மனசுதான் சார் கடவுள்.. "மனிதத்தை" மிஞ்சி வேறென்ன இருக்க போகிறது இந்த உலகில்??!!!












Click it and Unblock the Notifications