பயங்கரமான ஆளா இருக்காங்களே! விருதுநகர் நகை பறிப்பு.. அதன்பின் திருடனின் செயல்! “ஷாக்” ஆன போலீஸ்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: சாத்தூரில் ஆசிரியையிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதை பறித்துச் சென்ற திருடன், வாயில் போட்டு விழுங்கியது தெரியவந்து இருக்கிறது. திருடனின் வயிற்றில் திருடப்பட்ட ஆசிரியையும் செயின் இருந்தது ஸ்கேனில் தெரியவந்து உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்த ஆசிரியை ஒருவரிடம் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த திருடர்கள் செயினை பறித்துச் சென்றனர்.

அந்த செயினை ஒரு திருடன் விழுங்கிய நிலையில், போலீசாரிடம் காட்டுப் பகுதியில் வீசியதாக நாடகமாடி இருக்கிறார். இந்த நிலையில் திருடனின் வயிற்றை ஸ்கேன் செய்த போலீசார் அதில் செயின் இருந்ததை கண்டுபிடித்து உள்ளார்கள்.

ஆசிரியையிடம் செயின் பறிப்பு

ஆசிரியையிடம் செயின் பறிப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சிதம்பரம் நகரை சேர்ந்தவர் அன்னலட்சுமி. ஆசிரியையான இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பின்னால் இருந்து பறிக்க முயன்றனர்.

பாதி செயினுடன் தப்பிய திருடர்கள்

பாதி செயினுடன் தப்பிய திருடர்கள்

அப்போது சுதாரித்துக் கொண்ட ஆசிரியரை அன்னலட்சுமி பைக்கில் இருந்த படியே தன்னுடைய தங்க செயினை பறிக்க முயன்ற 2 திருடர்களுடன் போராடினார். அப்போது அறுந்த செயினின் ஒரு பகுதி திருடர்களின் கையிலும் மற்றொரு பகுதி அன்னலட்சுமியின் கையிலும் வந்தது. செயினின் ஒரு பகுதியை கையில் வைத்து இருந்த திருடர்கள் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து வேகமாக தப்பித்து சென்றனர்.

மடக்கிப்பிடித்த காவலர்

மடக்கிப்பிடித்த காவலர்

அவர்களை பிடிக்க முயன்ற ஆசிரியர் அண்ணலெட்சுமியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனால், அப்போது அங்கு காவல் பணியில் ஈடுபட்ட காவலர் ஒருவர் இதனை கண்டு திருடர்களை சென்ற இரு சக்கர வாகனத்தை பின்னாலேயே விரட்டிச் சென்றார். சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரம் என்ற காட்டுப் பகுதிக்குள் புகுந்து செயின் பறிப்பு திருடர்கள் தப்பித்து செல்ல முயன்றனர். அவர்கள் 2 பேரையும் அந்த காவலர் மடக்கிப் பிடித்து கைது செய்தார்.

திருடர்கள் யார்?

திருடர்கள் யார்?

அதன் பின்னர் அவர்களிடம் காவல் துறையினரால் நடத்தப்பட்ட விசாரணையில் ஆசிரியையிடம் தங்க செயினை பறித்து சென்றவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்து உள்ள முண்டுவேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துப்பாண்டி மற்றும் சிவகாசி சாட்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த அழகுராஜ் என்பது தெரிய வந்தது.

போலீசாருக்கு வந்த சந்தேகம்

போலீசாருக்கு வந்த சந்தேகம்

அப்போது அவர்கள் ஆசிரியை அன்னலட்சுமியிடம் இருந்து பறித்து சென்ற தங்க செயினை காட்டுப்பகுதியில் வீசியதாக தெரிவித்து உள்ளனர். அந்த செயினை போலீசார் காட்டுப் பகுதியில் பல மணி நேரம் தேடி இருக்கின்றனர். இருப்பினும் செயினை கிடைக்கவில்லை. இதனால் அடைந்த போலீசார் முத்துப்பாண்டி அதை விழுங்கி இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

ஸ்கேனில் ஷாக் தகவல்

ஸ்கேனில் ஷாக் தகவல்

விசாரணையில் அதை மறுத்த முத்துப்பாண்டியை போலீசார் தனியார் ஸ்கேன் செண்டருக்கு அழைத்து சென்று ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது முத்துப்பாண்டியின் வயிற்றில் ஆசிரியர் அண்ணலெட்சுமியிடம் பறிக்கப்பட்ட தங்கச் செயினின் ஒரு பகுதி இருந்தது காவல் துறையினருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து மருத்துவர்கள் ஆலோசனையின்படி தங்க செயினின் ஒரு பகுதி வெளியே எடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+