விதிமீறலால் பறிபோன 23 உயிர்கள்.. விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் என்ன நடந்தது? கலெக்டர் விளக்கம்
விருதுநகர்: விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் செயல்பட்ட பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் 23 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் ஆலையில் விதியை மீறி பணி நடந்துள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவலை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று பட்டாசு ஆலையில் 30க்கும் அதிகமானவர்கள் வேலை செய்தனர். இன்று மாலையில் திடீரென்று பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நடந்தது. பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின.

23 பேர் பலி
கட்டடங்கள் வெடித்து சிதறின. பட்டாசு ஆலை வெடித்ததில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்ததும் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தற்பாது வரை 23 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சிலர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதற்கிடையே தான் மீட்பு பணி நடந்தபோதும் மீண்டும் விபத்து நடந்தது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் போலீஸ்காரர்கள், தீயணைப்பு வீரர்கள் என மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் காயமடைந்துள்ளனர்.
மாவட்ட கலெக்டர் விளக்கம்
இந்நிலையில் தான் விருதுநகர் பட்டாசு வெடிவிபத்து பற்றி மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது: இன்று மாலையில் பட்டாசு ஆலை விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் 23 பேர் பலியாகி உள்ளனர். இதில் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதி்ல 16 பேர் பெண்கள். 3 பேர் ஆண்கள். இதுதவிர 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 3 பேர் 85 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களுக்கு சிகிச்சையளிக்க மதுரை, திருநெல்வேலியில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ்காரர்கள் - தீயணைப்பு வீரர்கள் காயம்
அதேபோல் மீட்பு பணியின்போது எதிர்பாராத விதமாகவும்விபத்து நடந்தது. இதில் 5 போலீஸ்காரர்கள், 3 தீயணைப்பு வீரர்கள், ஜேசிபி டிரைவர்கள் உள்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் அதிர்ஷ்டவசமாக ஆபத்தான நிலையில் இல்லை. விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலைக்கு லைசென்ஸ் உள்ளது. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை வேலைகள் நடக்க கூடாது. அந்த வகையில் விதிமீறல் நடந்துள்ளது.
தொழில் பாதுகாப்பு விதிமுறைகள்
இதுதொடர்பாக தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக பட்டாசு உற்பத்தி உள்ளது. இதனால் தொழில் பாதுகாப்பு விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. எஸ்ஓபி அடிப்படையில் தான் புதிய ஆலைகளுககு அனுமதி வழங்கப்படுகிறது. இதுதவிர ச சிறப்பு படைகள் மூலமாக தொடர்ந்து கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது'' என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications