ஜெ. இருந்திருந்தால் பாஜகவுடன் சேர்ந்திருக்க மாட்டார்.. அதிமுக பணிந்துவிட்டது.. ஸ்டாலின் தாக்கு!
அதிமுகவை மிரட்டி, ரெய்டு நடத்து பாஜக அதனுடன் லோக்சபா தேர்தலில் கூட்டணி வைத்துள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விருதுநகர் கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
விருதுநகர்: அதிமுகவை மிரட்டி, ரெய்டு நடத்து பாஜக அதனுடன் லோக்சபா தேர்தலில் கூட்டணி வைத்துள்ளது, ஜெயலலிதா இருந்தால் இப்படி நடந்து இருக்காது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விருதுநகர் கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக தென்மண்டல மாநாடு தற்போது விருதுநகரில் நடந்தது. விருதுநகரில் உள்ள பட்டம்புதூரில் இந்த மாபெரும் மாநாடு நடந்தது.
இதில் திமுகவினர் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக மற்றும் பாஜகவை மிக கடுமையாக தாக்கி பேசினார்.

மோடி கோட்டம்
ஸ்டாலின் தனது பேச்சில், இன்று சென்னையில் பிரதமர் மோடி பேசிய கூட்டம் நடந்தது. அதை டீவியில் பார்த்தேன். திமுக - காங்கிரஸ் கூட்டணியை மோடி சந்தர்பவாத கூட்டணி என்கிறார். நாங்கள் பல ஆண்டுகளாக இந்த கூட்டணியில் இருக்கிறோம். தேர்தல் இல்லாத நேரத்திலும் நாங்கள் நட்பாக இருந்துள்ளோம்.

ஆபத்து வரும்
இந்தியாவிற்கு ஆபத்து வரும்போதெல்லாம் நாங்கள் ஒன்றாக இருந்துள்ளோம். நீங்கள் வைத்த கூட்டணியை நாங்கள் எப்படி அழைப்பது. குட்கா ஊழல், சிபிஐ, ஐடியை வைத்து மிரட்டி கூட்டணியை உருவாக்கி உள்ளனர். இந்த கூட்டணியை எப்படி அழைக்க வேண்டும் என்று மோடியே சொல்லட்டும்.

ஆட்சிக்கு வந்தால்
மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா வளம் பெறும் என்று ஓபிஎஸ் சொல்கிறார். அப்போது நாட்டின் தற்போதையை பிரதமர் யார்? : வளர்ச்சி எங்கே?. ஜெயலலிதா பாஜக உடன் கூட்டணி வைத்து இருப்பார் என்றும் ஓபிஎஸ் சொல்கிறார். மோடியா? லேடியா? என்று கேட்டவர்தானே ஜெயலலிதா?. அவரா பாஜகவுடன் கூட்டணி வைப்பார்?. பலமுறை பாஜக அழைத்தும் அவர்களுடன் கூட்டணி வைக்காதவர் ஜெயலலிதா.

வெட்கம்
அதிமுகவினருக்கு வெட்கமாக இல்லையா?. எத்தனை முறை உங்கள் வீட்டில் சோதனை நடத்தி இருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிகள் வீட்டில் கூட சோதனை நடத்தினார்களே. உங்களை பாஜக எப்படி மிரட்டி இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம்












Click it and Unblock the Notifications