தேவேந்திரகுல மக்களின் 50 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார் பிரதமர்... எல்.முருகன் சொல்கிறார்!
விருதுநகர்: மத்திய அரசினுடைய திட்டங்கள் பெறும் பயனாளிகள் தமிழகத்தில்தான் அதிக அளவில் இருக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார்.
தேவேந்திரகுல வேளாளர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு கோரிக்கை வைத்தார்கள். பிரதமர் மோடி அவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி உள்ளார்.
திமுக தமிழருக்கு எதிரானது, தமிழ் கலாசாரத்திற்கு எதிரானது, தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது, தமிழ் கடவுளுக்கு எதிரானது என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.

தமிழகத்தில் அதிகம்
விருதுநகரில் பா.ஜ.க பூத் கமிட்டி விழா நடை பெற்றது. இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டார். அப்போது பாஜக தொண்டர்கள் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து, மாலை கொண்டு வந்து அவருக்கு அணிவித்தனர். பின்னர் பேசிய எல்.முருகன் கூறியதாவது:- மத்திய அரசினுடைய திட்டங்கள் பெறும் பயனாளிகள் தமிழகத்தில்தான் அதிக அளவில் இருக்கிறார்கள்.

தேவேந்திரகுல வேளாளர்கள் கோரிக்கை ஏற்பு
தமிழகம்தான் மத்திய அரசின் பயனாளிகளை பெற்ற முதல் மாநிலமாகும். தேவேந்திரகுல வேளாளர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு கோரிக்கை வைத்தார்கள். பள்ளன், குடும்பன். தேவேந்திர குலத்தான் இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர்கள் என்று கோரிக்கை வைத்தர்கள். நரேந்திர மோடி அவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றினார்.

திமுக தமிழருக்கு எதிரானது
காங்கிரஸ், தி.மு.கதான் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்தனர். அவர்கள் தமிழ்நாடு முன்னேறக் கூடாது என்று நினைக்கிறார்கள். திமுக தமிழருக்கு எதிரானது, தமிழ் கலாசாரத்திற்கு எதிரானது, தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது, தமிழ் கடவுளுக்கு எதிரானது, இந்து கடவுளுக்கு எதிரானவர்கள்.

பிரதமர் மோடி படத்துடன் திரண்ட மக்கள்
நாம் எந்த இடத்தில் வெற்றிவேல் யாத்திரையை தொடங்கினோமோ, அந்த இடத்தில் ஸ்டாலின் வவேல் தூக்கி இருக்கிறார் என்று எல்.முருகன் பேசினார். இந்த விழாவில் தேவேந்திரகுல சமுதாய மக்கள் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் படங்களுடனும், கையில் பதாகையுடனும் அந்த பகுதியில் வந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications