விருதுநகரில் 20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து.. மாவட்ட நிர்வாகம் அதிரடி
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வரும் நிலையில், அடிக்கடி வெடிவிபத்து சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 20 பட்டாசு ஆலைகளில் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரதான தொழிலாக பட்டாசு தொழில் உள்ளது. இந்த மாவட்டத்தில் நூற்றுக்கணக்கிலான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த பட்டாசு ஆலைகளை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடிவிபத்து சம்பவங்கள் நடைபெற்று உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்த பட்டாசு தொழிலை நம்பி சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த தொழில் மற்றும் தொழிலாளர்கள் மூலமாக கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து அடுத்தடுத்து பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு வருகின்றன.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 14 தொழிலாளர்கள் வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகளை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பட்டாசு தொழிற்சாலைகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தலில் ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல, மாவட்ட நிர்வாகம் சார்பில் போர்மேன்கள், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலக பாதுகாப்புத் துறை சார்பில், பாதுகாப்பு குறித்த செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பயிற்சியில் பங்கேற்காத 215 ஆலைகளுக்கு 16 லட்சத்துக்தும் மேல் அபராதம் விதிக்கப்பட்டு பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தியதன் பேரில் 195 ஆலையினர் பங்கேற்றனர்.
இந்நிலையில், விருதுநகரில் 20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்காததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்டம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications