ட்ரிபிள் “அ”.. ஆன்லைன் ரம்மி + ஆளுநர் + அண்ணாமலை! லிங்க் இருக்குமோ? காங்கிரஸ் எம்பிக்கு வந்த டவுட்டு

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: ஆன்லைன் ரம்மி, ஆளுநர், அண்ணாமலை ஆகிய இந்த மூன்று "அ"வுக்கும் தொடர்பு ஏதும் இருக்குமோ என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் கேள்வி எழுப்பி இருக்கிறார். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் விளையாட்டு விளையாடுவது தமிழ்நாட்டிற்கு எதிரானது எனவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

விருதுநகர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் மற்றும் அதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படுகிறதா என்பது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மத்திய அரசு திட்டங்கள்

மத்திய அரசு திட்டங்கள்

மிக முக்கியமாக இந்த கூட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தொடர்புடைய மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களிடமும் திட்டங்களின் செயல்பாடுகளில் ஏற்பட்டு இருக்கும் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பு

இந்த கூட்டத்தில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், பந்துப் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர். ஆய்வுக்கூட்டத்திற்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

கல்விக்கடன் திட்டம்

கல்விக்கடன் திட்டம்

அப்போது பேசிய அவர், "இந்த ஆய்வு கூட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. முக்கியமான திட்டங்களில் ஒன்றான கல்விக்கடன் திட்டத்தில் மத்திய அரசின் மெத்தன போக்கின் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் மிக குறைந்த அளவிலேயே கல்வி கடன் வழங்கப்பட்டு உள்ளது.

 நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன்

நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன்

மேலும் காங்கிரஸ் ஆட்சியில் விருதுநகர் மாவட்டத்தில் 120 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்ட கல்விக்கடன் தற்போது 9 கோடி ரூபாய் என்ற அளவில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது என்பது மிகவும் வருத்தத்க்குரிய ஒன்றாக உள்ளது. ஏழை எளிய மாணவர்களுக்கு தொடர்ந்து கல்விக்கடன் வழங்க வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வலியுறுத்தப்படும்.

ஆளுநரை அழுத்துகிறாரா அண்ணாமலை

ஆளுநரை அழுத்துகிறாரா அண்ணாமலை

ஆன்லைன் ரம்மி, ஆளுநர், அண்ணாமலை இந்த மூன்றுக்கும் உள்ள இடைவெளியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆன்லைன் ரம்மி பற்றிய பார்வையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சரி செய்ய வேண்டும். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழுத்தம் தருகிறாரா என சந்தேகம் வருகிறது என்றார்.

மூன்று “அ”

மூன்று “அ”

இந்த் ஆன்லைன் ரம்மி தமிழக மக்களுக்கு எதிரானது என தமிழக சட்டமன்றத்தில் அனைத்து கட்சியினர் பேசிய போது பாஜக மட்டும் ஆன்லைன் ரம்மியை எதிர்த்து பேச வில்லை. ஆன்லைன் ரம்மி, ஆளுநர், அண்ணாமலை ஆகிய மூன்று "அ" வுக்கும் தொடர்பு ஏதும் இருக்கிறதா என்று நாம் பார்க்க வேண்டும்.

அரசியல் விளையாட்டு

அரசியல் விளையாட்டு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொருத்தவரை எப்போதுமே உண்மைக்கு புறம்பாகவே பேசி பழக்கப்பட்டவர். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் விளையாட்டு விளையாடுகிறார். இது தமிழகத்துக்கு எதிரானது." என்று மாணிக்கம் தாக்கூர் குற்றம்சாட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+