மதுரை - தூத்துக்குடி 4 வழிச்சாலையில் ஷாக்.. அருப்புக்கோட்டையில் அப்பளமான லாரிகள்.. 3 பேர் பலி
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி 4 வழிச்சாலையில் இன்று காலை கண்டெய்னர் லாரியும் சரக்கு லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.இந்த விபத்தில் இரண்டு லாரிகளின் ஓட்டுநர்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை என்பது மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை செல்லும் பகுதியாகும்.இந்த சாலையில் எப்போதுமே கண்டெய்னர் வானங்கள் அதிக அளவில் செல்லும். தென்மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகள் மதுரை - தூத்துக்குடி 4 வழிச்சாலை வழியாக தூத்துக்குடிக்கு எடுத்துச்செல்லப்படுவது வழக்கம்.

இதனால் இந்த சாலையில் அதிக அவல் கண்டெய்னர் லாரிகள் பயணிக்கும். இந்த சூழலில் இந்த சாலையில் சென்ற கண்டெய்னர் லாரியும். சரக்கு லாரியும் இன்று காலை எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இரு வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் ஒரு கிளினர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த விபத்தில் கண்டெய்னர் லாரின் முன்பாகம் மற்றும் சரக்கு லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கின. விபத்தில் சிக்கியவர்களை எளிதில் மீட்கவே முடியாத அளவிற்கு சிக்கி கொண்டனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய மூவரின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த அருப்புக்கோட்டை போலீசார், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்திற்கு என்ன காரணம்? யார் மீது தவறு என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியும். பொதுவாகவேபெரிய வாகனங்களை அதிகாலை நேரங்களில் ஓட்டுவோர் கவனமாக ஓட்ட வேண்டும். தூக்கம் வந்தால் ஓரம் கட்டிவிட வேண்டும். இல்லாவிட்டால் பெரிய விபத்துகள் ஏற்பட காரணமாகிவிடும். இந்த விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை..
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications