விஜயபிரபாகரன் VS ராதிகா.. விருதுநகரில் வெல்வது யார்? ட்விஸ்ட் வைத்த தந்தி டிவி கருத்து கணிப்பு
விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தொகுதியில் வெற்றி பெறுவது யார்? என்பது பற்றி தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. அதில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் மற்றும் ராதிகா ஆகியோரில் யாருக்கு வெற்றி என்பது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. நாளையோடு பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் உள்ள லோக்சபா தேர்தல் தொடர்பாக தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர் தொகுதியில் யார் வெல்வார்கள்? என்று பார்க்கலாம்.

விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார், நாம் தமிழர் சார்பில் கவுசிக் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு 39 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை ஓட்டுகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக 2வது இடத்தை விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பிடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 30 சதவீதம் முதல் 36 சதவீதம் வரை ஓட்டுகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தொகுதியில் பாஜக 3வது இடத்துக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளராக நடிகை ராதிகா 17 முதல் 23 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெறுவார் எனவும், சீமானின் நாம் தமிழர் கட்சி 4 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை ஓட்டுகள் பெற்று 4வது இடத்தில் இருக்கும் என தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக மற்றவர்கள் 1 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை வாக்குகளை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications