ரூ.4 கோடிக்கு வீடு வாங்கிட்டேனாம்.. அமைச்சர் கீர்த்தனா பரபரப்பு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியமைத்து 4 மாதங்கள் ஆகப்போகிறது. வரவேற்கத்தக்க சில மாற்றங்கள் இருந்தாலும் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் மீது விமர்சனங்களும் இருக்கின்றன. இந்நிலையில் தான் 4 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியதாக பரவிய புகாருக்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார்.

சிவகாசியில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, "இவர்கள் 2 பர்சன்டேஜ் ஓட்டு தான் வாங்குவார்கள். சும்மா பூச்சாண்டி காமிக்கிறார்கள் என்று திமுகவினர் தேர்தலுக்கு முன்பு சொன்னார்கள். அப்போதும், இப்போதும் விமர்சிக்கிறார்கள். மக்கள் சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்க தொடங்கிவிட்டனர். சாமானிய மக்களுக்கு அரசியலை கற்பிக்கிறார். மக்களுக்காக நாங்கள் பணியாற்ற கூடாது என்று நினைக்கிறார்கள்.

minister-keerthana-explains-about-rumor-on-4-crore-houses

சட்டமன்றத்தில் ஒரே அழுகை

மக்களுக்கு எம்எல்ஏ தொகுதிக்காக என்ன பேசுகிறார் என்பது தெரிவதற்காக தான் லைவ் செய்யப்படுகிறது. சட்டமன்றத்தில் ஒரே அழுகை. நீங்கள் லைவ் போட்டு பிறகு அவை குறிப்பில் இருந்து நீக்குகிறீர்கள். அதற்குள் அவர்கள் அதை ரீல்ஸாக போட்டு சமூகவலைதளங்களில் பரப்பி பையர் விடுகிறார்கள் என்று அழுகிறார்கள். நாங்கள் சட்டமன்றத்தை இனி லைவில் காட்டுவோம் என திமுகவினர் கூறினர். அதை அவர்கள் செய்யவில்லை. அவர்களின் முகத்திரையை நாங்கள் காண்பித்து வருகிறோம்.

நம் ஊர் பால்கோவா அமைச்சராக இருந்தவர் கூட, திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றார். இப்போது தெரியாமல் இந்த சின்ன பசங்க கிட்ட மோதிவிட்டோம் என புலம்புகிறார்கள். இன்றைக்கு தவெக தான் தமிழ்நாட்டின் தனிப்பெரும் கட்சி. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் கொடியேற்றியபோது கிடைத்த உணர்வு இருக்கிறதே. எம்ஜிஆருக்கு அடுத்து மக்கள் கண்ணீர்விட்டது அன்றைக்கு தான்.

ஊழல் இல்லாத ஆட்சி

ஆட்சிக்கு வந்த 100 நாளில் நாங்கள் என்ன செய்தோம் என்பது அனைவருக்கும் தெரியும். தொண்டர்கள் எல்லாரும் சொல்லியிருப்பார்கள். வரலாற்றில் யாரும் செய்யாத ஒன்றை முதலமைச்சர் செய்துள்ளார். ஊழலற்ற ஆட்சி. எந்த முதலமைச்சராவது ஒரு மேடையில் ஏறி நின்று, இனிமேல் ஊழல் நடக்காது. ஊழல் நடந்தால் என்னிடம் வந்து சொல்லுங்கள் என்று சொல்லியுள்ளாரா. அதை சொன்ன ஒரே முதலமைச்சர் இவர் தான்.

முன்னால் எல்லாம் பட்டாசு கடை லைசென்சுக்கு பணம் கொடுத்தால் தான் அனுமதி கொடுப்பார்கள். இன்றைக்கு அப்படி இல்லை. இன்றைக்கு மட்டும் ஒரு ரூபாய் லஞ்சம் வாங்காமல் 133 பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இங்குள்ள யாரும், மேலே உள்ள யாரும் லஞ்சம் வாங்க மாட்டார்கள். வாங்கினால் என் வீடு அருகில் தான் உள்ளது. யார் வாங்கினாலும் தைரியமாக வந்து சொல்லுங்கள். சிலர் அறியாமையில் இருக்கிறார்கள்.

4 கோடிக்கு வீடு

நான் ரூ.4.5 கோடிக்கு வீடு வாங்கிவிட்டதாக சிலர் பேசுகிறார்கள். 4 கோடிக்கு வீடு வாங்கியுள்ளேனாம். அந்த வீட்டின் பத்திரத்தை யார் காட்டுகிறார்களோ அவர்களுக்கே நான் பரிசான கொடுக்கிறேன். அன்பளிப்பாக கொடுத்துவிடுகிறேன் காட்டுங்க. முடியலைங்க. நாங்கள் மக்களுக்காக பணியாற்ற வந்துள்ளோம். தேவையில்லாமல் எரிச்சலாக பேசுகிறார்கள். மக்களுக்கு எல்லாம் தெரியும். யார் நல்லது செய்கிறார்கள், கெட்டது செய்கிறார்கள் என மக்களுக்கு தெரியும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+