ராதிகாவை பார்த்து காரை நிறுத்திய அமைச்சர்.. கைக்குலுக்கியதும் விருதுநகர் எம்பி தந்த ஹைலைட் ரியாக்சன்
விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகாவை பார்த்ததும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தனது காரை விட்டு இறங்கி வந்து அவரிடம் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த வேளையில் பக்கத்தில் நின்ற காங்கிரஸ் வேட்பாளரும் சிட்டிங் எம்பியுமான மாணிக்கம் தாகூர் கொடுத்த ரியாக்சன் கவனம் ஈர்த்தது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. நாளை மறுநாள் வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.

இந்நிலையில் தான் இன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதன்படி விருதுநகர் லோக்சபா தொகுதியிலும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர்.
விருதுநகர் தொகுதியை பொறுத்தமட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார், நாம் தமிழர் சார்பில் கவுசிக் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் தான் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆவடிதோப்பு பகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகாவுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு இருசக்கர வாகன பேரணி நடந்தது. இதனை ராதிகா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அருப்புக்கோட்டை நகர் பகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மற்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் காரில் விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் ஆவடிதோப்பு பகுதியில் ராதிகாவை பார்த்தனர். ராதிகாவும் அவர்களை பார்த்தார். இதையடுத்து கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தனது காரை நிறுத்தி கீழே இறங்கினார். அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரும் காரில் இருந்து இறங்கினார்.
இவர்கள் 3 பேரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து கொண்டனர். பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர். இந்த வேளையில் ராதிகாவிடம் கைக்குலுக்கிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வாழ்த்து தெரிவித்தார். அப்போது அருகே நின்ற விருதுநகர் எம்பியும், மாணிக்கம் தாகூர் எம்பியும் சிரித்தபடி நின்றார். இது இருகட்சியினரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications