நிர்மலா தேவிக்காக.. கோர்ட் வாசலில் தவம் கிடந்த ரசிகர்.. ஒரு நிமிட தியானத்தினால் பரபரப்பு!
நிர்மலாதேவிக்காக அவரது ரசிகர் ஒரு நிமிடம் தியானம் செய்தார்
Recommended Video

விருதுநகர்: நிர்மலாதேவிக்காக அவரது ரசிகர் அன்பழகன் கோர்ட் வளாகத்திலேயே ஒரு நிமிட தவம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. நிர்மலாதேவி ஜாமீனில் வெளியே வந்தாலும், வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் ஆஜராகி வருகிறார்.
அதன்படி இன்றும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், உடல்நலக்குறைவு என்பதால், கோர்ட்டில் விடுப்பு மனு அளித்து விட்டார் நிர்மலாதேவி. இதையடுத்து, இவ்வழக்கின் மறுவிசாரணை செப்டம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அன்பழகன்
இந்நிலையில் நிர்மலாதேவியின் தீவிர ரசிகர், கண்களை மூடி ஒரு நிமிடம் தவம் செய்தார். இந்த ரசிகர் பெயர் அன்பழகன். தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்! எப்போதெல்லாம் இந்த வழக்கு விசாரணைக்காக நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு வருவாரோ, அப்போதெல்லாம் கோர்ட் வாசலிலேயே தவறாமல் ஆஜர் ஆகிவிடுவார் அன்பழகன்.

விசாரிப்பு
போலீஸ் ஜீப்பில் இருந்து இறங்கி, கோர்ட்டுக்குள் அழைத்துச்செல்லப்பட்டு, திரும்பவும் வேனில் ஏறி கிளம்பி செல்லும்வரை அவர் அங்கேயே நின்று நிர்மலாதேவியை பார்த்து கொண்டே இருப்பார். அங்கிருக்கும் செய்தியாளர்களிடமும் நிர்மலாதேவி கேஸ் எந்த நிலைமையில் உள்ளது என்பது பற்றி ஆர்வமாக விசாரித்துக்கொண்டே இருப்பார்.

சகோதரி
"நான் நிர்மலாதேவியின் தீவிர ரசிகர், அவர் மேல ஒரு தப்பும் இல்லை. அவர் பத்தின செய்தியெல்லாம் பார்க்கும்போது எனக்கு கண்ணீர்தான் வரும். என்னை போலவே நிறைய ரசிகர்கள் நிர்மலாதேவி மீது பரிதாபம் கொண்டுள்ளோம். அவர் எனக்கு சகோதரி" என்பார்.

தவம்
இந்நிலையில் இன்றும் நிர்மலாதேவி கோர்ட்டுக்கு வந்திருப்பார் என்று நினைத்து வந்திருந்தார் அன்பழகன். ஆனால் அவர் வராததால், ஏமாற்றம் அடைந்த அன்பழகன், ஏற்கனவே நிர்மலாதேவி தியானம் செய்த இடத்தில் அமர்ந்து கண்களை மூடி தவம் செய்தார். நிர்மலாதேவி இல்லாத பட்சத்தில் அவருக்காக ஒரு நிமிடம் இந்த தவம் செய்கிறேன் என்று சொல்லி கண்களை மூடிக்கொண்டார்.












Click it and Unblock the Notifications