“கோ பேக்” எடப்பாடி.. மறவர் கூட்டமைப்பின் “பரபர” போஸ்டர்! ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 22 பேர் கைது
விருதுநகர்: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.
ஜூன் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால் எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி பறிபோனது.
ஆனால், 2 வாரம் முன் எடப்பாடி பழனிசாமி அமர்வு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற இருவர் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆகியுள்ளார்.

எடப்பாடி பயணம்
இந்த நிலையில் இன்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி தென்மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். சென்னையிலிருந்து காலை விமானம் மூலமாக புறப்பட்ட பழனிசாமிக்கு மதுரை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிவகாசி, மதுரை
இதனை தொடர்ந்து கார் மூலமாக விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதையடுத்து மாலை 4 மணிக்கு மதுரைக்கு அவர் புறப்படுகிறார். 5 மணியளவில் மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகிறார்.

பரபரப்பு போஸ்டர்
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் வருகையை எதிர்த்து அனைத்து மறவர் நலக்கூட்டமைப்பு என்ற பெயரில் விருதுநகர் - திருமங்கலம் சாலையின் இருபுறங்களிலும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. 20% இடஒதுக்கீட்டில் 68 சீர்மரபு பழங்குடியினர் உள்ளிட்ட 115 சாதியினர் வஞ்சித்து ஒரே சாதிக்கு 10.5% அளித்த எடப்பாடி அவர்களே எங்கள் பகுதிக்கு வராதீர் என போஸ்டர் ஒட்டப்பட்டது.

ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கைது
சாலையின் இருபக்கங்களிலும் ஒட்டப்பட்டிருந்த இந்த போஸ்டர்களால் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அசம்பாவீதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த 22 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை கைது செய்து இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications