பங்குனி அமாவாசை..சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடைக்குமா? வனத்துறை சொன்னது என்ன?
பங்குனி மாதம் பிரதோஷம் அமாவாசை வழிபாட்டையொட்டி, பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்: பங்குனி மாத தேய்பிறை பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்க நாளை முதல் 4 நாட்களுக்கு மலையேற பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. நீரோடை உள்ள பகுதிகளுக்கு சென்று குளிக்கவும், இரவு நேரங்களில் மலைப்பகுதியில் பக்தர்களுக்கு தங்குவதற்கும் கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
சித்தர்களின் பூமி என்றும் அரிய வகை மூலிகை வனப்பகுதி என்றும் போற்றப்படும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயில் விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.

இக்கோயிலுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், நாள், கிழமை என்று எதுவும் பார்க்காமல் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்துச் சென்றதுண்டு.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்தன்று மட்டுமே பக்தர்கள் மலையேறிச் சென்று சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கத்தை தரிசிக்க கோயில் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது கொரோனா நோய்த்தொற்று அபாயம் முற்றிலும் குறைந்துவிட்ட காரணத்தினால், கடந்த ஓராண்டு காலமாக கோயில் நிர்வாகமும் சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தியுள்ளது.
வரும் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் 22 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்யலாம் என்றாலும், இதில், 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், மற்றும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல், காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை மட்டுமே பக்தர்கள் மலையில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, கோடை காலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் எளிதில் தீப்பற்றும் அபாயம் உள்ளது. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால், வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லவும் கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கோடை காலங்களில், வன விலங்குகள் தண்ணீர் தேடி நீரோடை உள்ள பகுதிகளுக்கு வரும் என்பதால், நீரோடை உள்ள பகுதிகளுக்கு சென்று குளிக்கவும், இரவு நேரங்களில் மலைப்பகுதியில் பக்தர்களுக்கு தங்குவதற்கும் கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. கோடை மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளதால் அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications