மோடி நன்றாக சீன் காட்டுகிறார்.. என்ன ஒரு நடிப்பு.. விருதுநகரில் தெறிக்கவிட்ட ஸ்டாலின்!
லோக்சபா தேர்தலில் 40க்கு 40 இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விருதுநகர் கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
Recommended Video

விருதுநகர்: லோக்சபா தேர்தலில் 40க்கு 40 இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெறும், மோடியின் நடிப்பு இங்கு செல்லாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விருதுநகர் கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
திமுக தென்மண்டல மாநாடு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தற்போது விருதுநகரில் நடந்தது. விருதுநகரில் உள்ள பட்டம்புதூரில் இந்த மாபெரும் மாநாடு நடந்தது.
இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பாஜகவை மிக கடுமையாக தாக்கி பேசினார்.

ஸ்டாலின் பேச்சு
திமுக விருதுநகர் மாநாட்டில் தலைவர் ஸ்டாலின் தனது பேச்சில், தமிழகத்தின் அவல நிலைக்கு திமுக முற்றுப்புள்ளி வைக்கும்.அதற்கான தொடக்கமும்தான் இந்த மாபெரும் விருதுநகர் மாநாடு. மத்திய மாநில ஆட்சிக்கு நாம் முற்றுப்புள்ளி வைப்போம். தமிழக அரசியலில் இரண்டு முதல்வர்களை தந்த மாவட்டம் விருதுநகர்.

நல்ல ஊர்
விடுதலை வீரர்கள் சின்ன மருதும், பெரிய மருதும் பிறந்தது இங்குதான்.அவர்கள் பிறந்தது முக்குலம் ஊரில்தான். 2004ல் லோக்சபா தேர்தலுக்கு முன் இங்கு மாநாடு நடத்தினோம். அந்த தேர்தலில் திமுக கூட்டணி 40 இடங்களையும் வென்றது.

மீண்டும் நடக்கும்
இப்போது வரலாறு மீண்டும் திரும்புகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் லோக்சபா தேர்தல் வருகிறது. மீண்டும் நாம் 40க்கு 40 இடங்களை பெறுவோம். நாம் விரும்பும்: நாம் சொல்லும் நபர்தான் பிரதமராக வருவார். ராகுல் காந்திதான் பிரதமராக வருவார்: பெருமையாக சொல்கிறேன்.

கண்டிப்பாக நடக்கும்
இந்த கூட்டம் அதை எனக்கு உணர்த்துகிறது.கொல்லைகார எடப்பாடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாசிச பாஜக ஆட்சிக்கு நாம் முடிவு கட்ட வேண்டும். அதை இந்த தேர்தலில் நாங்கள் செய்வோம்.எல்லாம் நல்லபடி நடக்கும்.

மோடி நடிப்பு
மோடி சீன் காட்டுகிறார். தமிழ்நாட்டிற்கு வந்து மக்களை கவனிப்பது போல சீன காட்டுகிறார். மோடி நன்றாக நடிக்கிறார். மோடி அடிக்கடி இனி வந்து இப்படித்தான் பேசுவார். 130 கோடி மக்களை மோடி நடுத்தெருவில் நிறுத்தினார்.பணமதிப்பிழப்பு நீக்கம் மூலம் நடு ரோட்டிற்கு மக்களை கொண்டு வந்தார், என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications