செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற போலீஸ்காரரிடம் செல்போன் பறிக்கப்பட்டதா? என்ன நடந்தது?
விருதுநகர்: திருச்செந்தூர் விரைவு ரயிலில் பயணித்த ஆயுதப்படை காவலர் இன்று காலையில் விருதுநகர் அருகே தண்டவாளத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். விசாரணையில், தன்னிடம் இருந்த செல்ஃபோனை பறித்துவிட்டு சிலர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதாக போலீஸ்காரர் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் போதையில் ரயிலிலில் இருந்து கீழே விழுந்துவிட்டு நாடகம் ஆடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருபவர் ஜெயக்குமார் (வயது 29). இவரது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் ஆகும். இந்த நிலையில் ஜெயக்குமார் நேற்று தனது சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் திருச்செந்தூர் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார்.

அப்போது அவர் ரயிலின் முன்பதிவில்லா பெட்டியில் பயணம் செய்துள்ளார். ரயிலில் படியில் அமர்ந்து பயணித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே இன்று காலையில் விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் பகுதியில் தண்டவாளம் அருகே பலத்த காயத்துடன் ஜெயக்குமார் விழுந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்த அந்த பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் ஜெயக்குமாரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து கண் விழித்த ஜெயக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் என்னிடம் இருந்த செல்போன், மணிபர்சை பறித்துவிட்டு, சிலர் என்னை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதாக கூறினார். செல்ஃபோனுக்காக ஓடும் ரயிலில் இருந்து தன்னை தள்ளிவிட்டதாக போலீஸ்காரர் ஒருவர் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ரயில்வே போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் காவலர் ஜெயக்குமார் உடைமைகள் திருச்செந்தூர் சென்றடைந்த ரயில் பெட்டியில் மீட்கப்பட்டது. அப்போது அந்த பையில் அவரது செல்ஃபோன் மற்றும் மணிபர்ஸ் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதற்கிடையே போலீஸ்காரர் ஜெயக்குமாரிடம் இருந்து யாரும் செல்போன் பறிக்கவில்லை என்றும், அவரை யாரும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் போலீஸ்காரர் ஜெயக்குமார் கூறியது தொடர்பாக ரயில்வே போலீசார் கிடிக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில், மது போதையில் ரயிலிலில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டு, செல்போனுக்காக தன்னை சிலர் தள்ளிவிட்டதாக நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications